Monday, July 23, 2007

ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயம்


SRI KRISHNAN TEMPLE


ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலயம்
ண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை’ என்று ஆண்டாள் நாச்சியார்திருமொழியில் பாடுகிறார். அண்டர் குலத்து அதிபதியான விஷ்ணு என்ற பரம்பொருளின் எட்டாவதுஅவதாரம் கிருஷ்ணாவதாரம். தர்மத்தை நிலைநிறுத்திஅதர்மத்தை வீழ்த்திய அற்புத அவதாரம் பாரதப்போர் விளைக்கவும், பூமியின் பாரம் தீர்க்கவும்,கிருஷ்ண உணர்வுகளை இவ்வுலகில் பரப்பவும் வடமதுர சிறையில் நாராயணன் வந்துபிறந்தான்.
கோகுலம்,பிருந்தாவனம், துவாரகை, விராடபூமி, அஸ்தினாபுரம்,குருஷேத்திரம் ஆகிய இடங்கள் கண்ணனின்
லீலைகள் கண்ட தலம்.
திருமாலின் அவதாரங்களிலேயே மிகச் சிறந்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். கிருஷ்ணாவதாரம்வெறும் தத்துவங்களை
மட்டும் சொல்லவில்லை.
மனித வாழ்வோடு இணைந்து நிற்கிறது.கோகுலத்துக் குழந்தை கண்ணன்,ஆயர்பாடியில் கோபியர்களோடு காதல் பொழிந்த கோபாலகிருஷ்ணன், துவாரகையில் மன்னன் கிருஷ்ணன், பராதப்போரின் சூத்ரதாரி கண்ணன் என்று குழந்தைப்பருவம்
தொடங்கி, நீதியின் வெற்றிக்காக சாரத்தியம் செய்தது வரை
கிருஷ்ணன் செய்த ஒவ்வொருசெயலிலும் மனித
வாழ்வின் துடிப்பும்,பொருளும்,தத்துவமும்ஊடாடி
நிற்கிறது.அது மனித வாழ்வில் ஏற்றுக்கொள்ளகூடிய
யதார்த்தமாக மலர்ந்து மணம் வீசுகிறது.

1870- ஆம் ஆண்டு வாக்கில் தோற்றம் கண்ட ஆலயம்
கிருஷ்ணன் ஆலயம்.சிங்கப்பூரின் மத்திய வட்டாரப்
பகுதியில் அமைந்துள்ள சாலைகள் பிராஸ் பசா சாலை
(Bras Basah Road), விக்டோரியா சாலை (Victoria Street),
பிரிஸ்சிப் சாலை(Prinsep Street), குவின் சாலை (Queen Street), வாட்டர்லோ (Waterloo Street).இச்சாலைகள் யாவும்
சிராங்கூன் சாலையை ஒட்டியே அமைந்திருந்தன.

இப்பகுதி சாலைகளில் வாழ்ந்த இந்தியர்கள் மாலையில்
ஒன்று கூடும் பொது இடமாக வாட்டர்லோ சாலை
அமைந்திருந்தது. கடல் கடந்து வந்த இவர்களுக்கு ஒரு
வழிபாட்டுத் தலமிருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற
எண்ணம் தோன்றியதுதிரு.அனுமான் பீம் சிங் (Mr. Hanuman
Beem Singh) என்பார்க்கு. தாய்நாட்டை விட்டு வந்திருந்த
போதிலும், இறைவழிபாட்டை மறவாது கோயில் கட்டி,
தங்களின் கலாச்சாரம், மதம்,மொழி ஆகிவற்றை மறவாது
ஒழுகி நிற்கத் துடித்த காலம்.தங்களின் சக்திக்கேற்ப
ஆங்காங்கே சிறு குடில்களாகக் கோவில்களை
அமைத்துவழிபட்டார்கள்.

அந்த எண்ணத்தைச் செயலாக்க வாட்டர்லோ சாலையி
லிருந்த தென்னை,வாழைத்தோட்டங்களைச் சுத்தம் செய்து
ஒரு ஆலமரத்தின் கீழ் அனுமான், விநாயகர் தெய்வங்களை
வைத்து விளக்கேற்றித் தினந்தோறும் பூஜை செய்து
வழிபாட்டைத் தொடங்கினார்கள்.சில காலத்திற்குப் பின் கிருஷ்ணனையும் வைத்து வழிப்படத்தொடங்கியுள்ளார்கள்.

சிறிய குடிலாக இருந்தபோதிலும் பக்தர் கூட்டம் அதிகரிக்கவே ,பக்தர்களின் எண்ணிக்கைக்குஏற்பக்
கோவில் பெரிதாக இருக்கவேண்டும் எண்ணினார்.
1880 - ஆம் ஆண்டில் திரு.அனுமான் பீம் சிங்
கிருஷ்ணன் கோயில் நிர்வாகத்தினைத் தன் மகன்
திரு. உம்நா சோம்பா (Humna Somapah) - விடம்
ஒப்படைத்து, கோவிலின் தர்மகர்த்தாவகவும்நியமித்து
உள்ளார்.(1880 -1904)

திரு. உம்நா சோம்பா நிருவாகத்தில் கிருஷ்ணன் கோவிலை
கூரை குடியிலிருந்து செங்கல்,காரை கற்கட்டிடமாக மாற்றி, சுற்றுபுறங்களை செப்பனிட்டு வேலியிட்டு மேம்பாட்டு பணிகளைச்செய்துள்ளார்.1904- ல் திரு. உம்நா சோம்பா
(Humna Somapah) தன் உறவினரான ஜோக்னி அம்மாளிடம்
(Joognee Ammal) பொறுப்பை ஒப்படைத்தார். ஜோக்னி
அம்மாள் பொறுப்பேற்றவுடன் கோவிலை மேம்படுத்தி,
சீரமைத்துள்ளார். புதிய முறையான மூலஸ்தானமும்,
விமானம் அமைத்து 1933–ல் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார்.

1935-ல் ஜோக்னி அம்மாள் திரு. பக்கிரிசாமியிடம் கோவில் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார்.திரு. பக்கிரிசாமி பொறுப்
பேற்றவுடன் மேலும் சில கோயில் கட்டிட பணிகளை மேற்கொண்டுள்ளார்.மூலஸ்தானத்திற்கு முன் மேல்
தளத்துடன் கூடிய ஒரு மண்டபம் கட்டியுள்ளார். இதன் கும்பாபிஷேகம்21-ம் தேதி, சனவரி 1959- ஆண்டு
நடைபெற்றுள்ளது.

1984-ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தைத் தன் மகன்
ப.சிவராமனிடம் ஒப்படைத்தார். திரு. சிவராமன்பொறுப்
பேற்றவுடன் பெரிய மாற்றங்களைச் செய்தார். தற்போதைய தேவைக்கேற்ப கோவில் புதுப்பிப்பும்முன்னேற்றமும்,
பொலிவும் பெற்றன. கோயில் நுழைவாசல்,கோபுரம்
புதிப்பிக்கப்பட்டது.
புதிய சன்னதிகளில்ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை,
குருவாயூரப்பன், சுதர்சனா, மகாலெட்சுமி சிலைகள் ஸ்தாபிக்கப்பட்டன.புதிதாக வசந்த மண்டபமும் கட்டப்பட்டது.
இதன் கட்டிடப் பணி நிறைவு பணி பூஜைகள் 12-11-1989-ல்நடந்தேறியன.

சூரிய ஒளியால் உலகம் முழுவதும் தங்க முலாம்
பூசியது போல் கண் கொள்ளாக் காட்சி கிருஷ்ணனின்
அழகிய வடிவம். கருநீல ஒளியை வழங்கும் முகத்தின்
வடிவம், காண்போரின் கண்களையும், கருத்தினையும்
கவர்ந்திழுக்கும் அருள் வடிவம்.கிருஷ்ணன் கோவிலை
அடுத்து சீனக் கோயிலும் அமைந்துள்ளதால்சீனப் பக்தர்களும் கிருஷ்ணன் கோயில் வந்து கிருஷ்ணனின் தரிசனம் பெற்றுச் செல்கிறார்கள்.

137 ஆண்டு வரலாறு கொண்ட கிருஷ்ணன் கோயில் இன்று
கண்கவரும் வண்ணங்களுடன் சுற்றுப்பயணிகளையும் கவர்ந்து வருகிறது.

கோவிலில் யோகா, வேத வகுப்புகள், நாதஸ்வரம், தவில்,
நாட்டியம், தற்காப்புக்கலைகள், நுண்கலைசம்பந்தமான
வகுப்புகள் போன்ற வகுப்புகளும் நடத்தப்படுகிறது.
பூஜைகள் தினம் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
காலை 6-30 முதல் 12 மணி வரையும், மாலை 4-30முதல்
இரவு 9-30 வரை பூஜைகள் நடக்கின்றன.

விழாக்கள்....!

தமிழ் புத்தாண்டு விழா, வசந்த நவராத்திரி, வைகாசி வைசகம், ஆடி வெள்ளி, செவ்வாய், சங்கு அபிஷேகம்,வரலெட்சுமி விரதம், விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி சனி வாரம்,திருக்கார்த்திகை, சர்வலாய விஷ்ணு தீபம்,ஆஞ்சநேயர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி.
கல்வி உதவி நிதி இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்தில் ஆலயங்களும் பங்கேற்க முடியும் என்பதில் கிருஷ்ண ஆலயம் கல்விக்குஉதவி நிதி அளிக்கிறது. தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்கும், பலதுறை தொழிற் கல்லூரிமாணவர்களுக்கும், பல்கலைக் கழக மாணவர்களுக்கும் கல்வி நிதியாக வழங்குகிறது.


- கிருஷ்ணன்,
சிங்கப்பூர்.


ஆலய முகவரி:-


Sri Krishnan Temple,

152 Waterloo St.,

Singapore 187961

Tel 6337 7957 F, 6334 271267695784 F. 67699003

1 comment:

kaverison said...

Thank you for such a great blog. I didn't know there are this many temples in Singapore.

I live in the US and pass through Singapore when I go to India. I make it a point to goto Serangoon road everytime. I will checkout other temples next time.

I typically wander to the Krishnan temple. Once you are inside the temple, you suddenly feel like you are back in Thruvallikeni or Mylapore.

What is more interesting here is how many Chinese people actually pray here. They do it their way, incense sticks and kowtowing like they would in a Buddha temple. And surprisingly there is a Buddhist temple next to it, so there is a confluence of cultures right there. To me, quintessential Singapore!