Saturday, July 14, 2007

<>கோபுர தரிசனம்..-(1)<>




கோபுர தரிசனம்
கோடி புண்ணியம்



நாம் ஏன் கோபுர தரிசனம் செய்யவேண்டும்?


கோபுர அமைப்பு



பெரிய பிராகாரம் ஒன்று அமைத்து அதற்கு வாயில் ஒன்றுஅமையபெறும். அந்த வாயிலுக்கு உயர்ந்த கோபுரம்ஒன்று அமைப்படும். ஆலயத்தி ன் உள் இருக்கும் கோபுரங்கள் எல்லாம் உயர்ந்திருக்கும். இப்படி உயர்ந்துஇருப்பதால், நெடுந்தூரத்திற்க்கு அப்பாலிருந்து கோபுரம்காணலாம். இராஜ கோபுரத்தை ஸ்துல லிங்கம் என்றுகூட கூறுவார்கள். கோபுரத்தையே தெய்வ சொரூபமாகஎண்ணி வணங்குவார்கள். தூரத்தில் இருப்பவர்களுக்கும்இறைவனின் நினைவு கூறவே கோபுரம் அமைக்கப்பெற்றது.

இராஜ கோபுரத்தின் அருகில் சென்று அதன் அமைப்பைகவனித்தால் சில அதியசங்களை காணலாம். கோபுரத்தில்கணக்கற்ற சிறிய, பெரிய சுதையிலான சிற்பவடிவங்களைக் காணலாம். அவற்றுள் மா னிட வடிவங்களையும் காணலாம்.இறைவனின் திருவிளையாடல்கள், அற்புதம் நிகழ்த்தியகாட்சிகள்,தேவர்கள், விலங்குகள், பறவைகள், ஏனைய சிற்றுயிர்கள்அதில் இடம் பெற்று, விளக்கங்களும் இருக்கும். பிரபஞ்சஅமைப்பில் இவைகளுக்கும் இடமுண்டு எ ன்பது கோட்பாடுகள்.சிற்றுயிர்கள்,பேருயிர்கள், விலங்குனம், மக்கள் இனம்,தேவர் கூட்டம் ஆகிய எல்லோரும் பிரபஞ்சத்தில் இருக்கிறார்கள்,அண்டத்திலுள் இன்னது இருக்கிறது என்று எல்லாப்படித்தரங்களிலும் உள்ள அனைத்தும் அங்கு இடம் பெற்றிருக்கும்.
இக்கோட்பாட்டை இராஜகோபுரம் உருவகப்படுத்திவிளக்குகிறது. இயற்கையின் நடைமுறையின் புறச்சின்னமாக பெரியகோபுரம் அமைந்திருக்கிறது என்றால் இயற்கையில்உள்ளவைகளை எல்லாம் அதன் மூலம் விளக்கம் பெற்றுள்ளன.

இராஜ கோபுரத்தின் வாயில்கள் பொதுவாக ஒற்றைப்படைஎண்ணில் அமைந்திருக்கும். மூன்று, ஐந்து, ஏழு,ஒன்பது, பதினென்று என்ற நிலையில் கோபுரம் வாயில்அமைந்திருக்கும்.அத்தகைய வாயில் தத்துவத்துக்குவிளக்கம் இருக்கிறது.மூ ன்று வாயில் உள்ள இராஜ கோபுரஇடத்துக்கு ஜாக்கிரத, சொப்பன, சு ஷ¤ப்திஎன்னும் மூன்று அவஸ்தைகளை அவை குறிக்கின்றன. ஐந்து வாயில்கள் உள்ள இடத்து ஐம்பொறிகளை அவைபெறுகின்றன. ஏழு வாயில் உள்ள இடத்து மனம், புத்தி எனும் இன்னும் இரண்டு தத்துவங்கள் சேர்க்கப் பெறுகின்றன.ஒன்பது வாயில் உள்ள இடத்து சித்தம் அகங்காரம் எனும் இன்னும் இரண்டு தத்துவங்கள் சேருகின்றன.

இப்படி நம்முடைய அமைப்பில் உள்ள வெவ்வேறு தத்துவங்களுக்குக் கோபுர வாயில் சின்னங்களாகஅமைந்திருக்கின்றன.ஒரு மனிதனின் உடலமைப்பை கொண்டே திருக் கோவில்கள் கட்டப்பட்டு,வழிபாட்டுக்கு உரிய அமைப்பாகமதிக்கப்படுகின்றன.குண்டலினி சக்தி உறங்கிக் கிடக்கும் மூலாதாரமேகொடி மரமாகச் சித்திரிக்கப்பட்டு, ஸ்தாபிதம்செய்யப்பட்டுள்ளது. கொடி மரத்தில் காணப்படும் 32வளையங்கள், மனித உடலின் முதுகுத் தண்டிலுள்ள 32 எலும்புகளைக் குறிப்பதாகும். 32 என்பது எண்கணிதத்தில் குருவின் ஆதிபத்தித்தில் மிகுந்த சிலாக்கியத்திற்குரியதாகும். மேலும் மனிதனுடையமுப்பத்து இரண்டாவது வயதில்தான் அறிவுப் பல் முளைக்கிறது.

கொடி மரத்தில் காணப்படும் கொடிக் கயிறுகள்இடைபிங்கலை, பிங்கலை என்ற நாடிகளைக் குறிக்கின்றன.இவற்றின் வழியே மூச்சை சரியான முறையில் அமைத்துயோகம் பயிலும்போது, ஆத்மா 'ஆனந்தம்’ எனப்படும்இறையடியை அடைந்து, பிறவியிலிலாப் பெரு நிலையைஅடைகிறதென்பதைக் குறிக்கவே திருவிழாவின்போது,'கொடியேற்றம்’ நடைபெறுகிறது.

எண்ணங்களின் பிறப்பிடமாக விளங்கும் கொப்புள்ஸ்தானத்தில் சிவனுடைய வாயிற் காப்போனாகிய நந்தியைபிரஷ்டை செய்வதன் மூலம் எண்ணங்களை அடக்கி, மனதினை தூய்மைப்படுத்த வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது. கர்ப்பக்கிரகம் அல்லது மூலஸ்தானத்தை பிரம்ம கபால உருவில் அமைப்பது வழக்கம். புருவமத்தியில் ஆக்ஞா சக்கரத்தில் ஆன்ம நேய ஒருமைப்பாடு ஏற்படும் பொழுது ஆன்ம ஒளி ஏற்படும் என்பதைக்குறிக்கவே லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஞானிகள், முனிவர்கள், சித்தர்கள் சிறந்தகோயில்களையும், அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும்முறைகளை வகுத்து கொடுத்து, கோயில் திசை நான்கிலும்விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்துஅவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள் .
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம்தொழுவது சாலவும் நன்று என்ற முன்னோர்களின்பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.ஆகமவிதிப்படி கோயில் நிர்மாணித்து, அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது புணர் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுவழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ளகோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும்செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாகஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்றுஅழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது. அந்தசக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி, புது உணர்வு,உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம். இதனால்தான்கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று நம்முன்னோர்கள் கூறினர்.

கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ளகலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின்நேர் கீழே உள்ள இறைபீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில்உள்ள தங்கத்தாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திரசக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான்அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுக்கிறது.

இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானிபோவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்துவெளிப்படும் சக்தியை (14 ஆயிரம் உயிர் சக்தி) நம்உடலில் உள்ள உயிர் அணுக்களை தாக்க இயலாது.எனவே தான் பீடத்தின் மேல்அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பதுமுனைகள் வழியாக வெளியேற செய்கிறது. அந்த சக்திகர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியேவருகிறது. அப்போது அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. இதனால் நமக்குஆன்மீக உணர்வு, புத்துணர்வு, புத்துணர்ச்சியை ஏற்படுத்தி நம்முள்ள கவலைகள், பிரச்சனைகள், உடல்நோய்களைப் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது.