Saturday, July 14, 2007

<>ஆலய நுழை வாசல் - (1) <>


ஆலய நுழை வாசல்
திருக்கோயில்களின் அவசியத்தை உணர்ந்த நம்முன்னோர்கள் அனைத்து இடங்களிலும் அவற்றை அமைத்தனர்.'ஆலயம் தொழுவது சாலவும் நன்று', என்று அறிவிற் சிறந்த ஒளவையார் பாடியுள்ளார்.கோயில் {கோ-இறைவன், இல் – இல்லம்} இறைவனின் இல்லம், இருப்பிடம். ஆலயம் என்பதற்கு இறைவனின்திருவடிகளில் உயிர்கள் இணைந்திருக்க, பொருந்திஇருக்கக் தகுந்தவிடம் என்பதாகும். 'கோயில் இல்லாத ஊரில்குடியிருக்கவேண்டாம்'போன்ற முதுமொழிகள் இவ்வுண்மையை உணர்த்துகின்றன. திருநாவுக்கரசர் கோயில் இல்லாத ஊரைக் 'காடு' என்று குறிப்பிடுகிறார்.
திருக்கோயில்கள் இல்லாத திருஇல் ஊரும்
திரு வெண்ணீறு அணியாத திருஇல்
ஊரும் பருக்கோடிப் பத்திமையால் பாடா
ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா
ஊரும் விருப்பொடு வெண்சங்கம் ஊதா
ஊரும் விதானமும் வெண்கொடியும் இல்லா
ஊரும் அரும்போடு மலர் பறித்திட்டுண்ணா
ஊரும் அவை எல்லாம் ஊரல்ல அடவி காடே.(தனித்திருத்தாண்டகம்: பாடல்: 933)இயற்கை முழுதிலும் அழகு உண்டு. சில இடங்களில் அமைந்துள்ள அழகு நம் உள்ளத்தை கொள்ளைகொள்கிறது. மேலான எண்ணங்களை வளர அத்தகைய அழகு பயன்படுகிறது.

உயர்ந்த எண்ணங்களைஎண்ணுவதற்கு அழகிய இடங்கள் பெரிதும் பய ன் பட்டு வந்திருக்கின்றன. அந்த இடத்துக்கு புதிய அருள்சக்தியை நல்குகிறது.இயற்கையின் பொலிவும், அழகும் ஒன்று சேர்ந்து அந்த இடத்தை புண்ணியஸ்தலமாக, ஆலயமாக அமைகிறது. பாடல் பெற்ற ஸ்தலங்களுக்கு எ ன்றென்றும் மறையாத மகிமையுடன்விளங்குகிறது. பாமர மக்களும் பய னுறம் பொருட்டே ஆலயங்கள் அமைக்கப் பெற்றன. ம னித உடலில்உள்ள தத்துவங்களை விளக்குவதற்க்கே ஆலயங்கள் அமைந்துள்ளது.அரசர்களும் செல்வந்தர்களும் பக்தர்களும் காலம் காலமாககோயில்களை எழுப்புவதிலும் அவற்றிற்குத் திருப்பணிகள்செய்வதிலும், அவற்றில் வழிபாடுகளும் விழாக்களும்நடைபெறச்செய்வதிலும் அதிக ஈடுபாடு காட்டினர்.
தங்கள்அரண்மனைகளை விடக் கோயில்களே நிலைத்து நிற்கவேண்டும் என்று எண்ணிய மன்னர்கள் ஆலயங்களைவலிமையாகக் கட்டியதுடன் அவற்றை அவ்வப்போதுபுதுப்பித்தனர். ஊரின் உயர்ந்த கட்டிடம் ஆலய இராஜகோபுரம் என்று வரம்பு நிர்ணயித்து அதனைப் பிற கட்டிடங்கள் மிகாவண்ணம் வாழ்ந்தனர். காலப்போக்கில் எல்லாத்துறைகளிலும் அன்றாட வாழ்வியலிலும் ஆலயங்கள் பின்னிப்பிணைந்தன. தமிழ்நாட்டின் வரலாறே திருக்கோயில்களின்வரலாறு என்று கூறுமளவு ஆலயங்கள் முக்கியத்துவம் பெற்றன.அரசர்கள், அதிகாரிகள், செல்வந்தர்கள், அன்பர்கள் ஆகியோர் அவரவர்களின் இஷ்ட தெய்வங்களுக்குக் கோயில்கள் அமைத்தனர். எனவே சிவன், திருமால், முருகன்,விநாயகர், அம்மன், கிராம தெய்வங்கள் ஆகிய வடிவங்களுக்கு கோயில்கள் தோன்றின.
எங்கும் வியாபித்திருக்கும் இறைவனுக்கு ஆலயம் எதற்கு என்றுவினா எழலாம். தொலைக்காட்சி, வானொலிநிலையங்களிலிருந்தும் ஒலிரும் மின்னலையை அதற்குரிய சாதனங்கள் மூலம்தான் நாம் ஒலி,ஒளியை இனம் கண்டு பார்த்தும்,கேட்டும் இன்புற முடியும். பூமியின் மடியில் நீர்பரந்து,விரிவியிருந்தாலும் தோண்டித்தான் எடுக்கவேண்டும் பசுவின் உடல் முழுதும் பால் விரவியிருந்தாலும், மடிக்காம்பின் மூலம்தான் நாம் பெறமுடியும். அது போன்றுதான் இறைவன் எங்கும் நீக்கமற வியாபித்து இருந்தாலும் ஆலயத்தின்மூலம்தான் அருள் பாலிக்கிறார்.இதனைத்தான் ஆலயம்தொழுவது சாலவும் நன்று என்று ஒளவையார் கூறியுள்ளார்.

மெய்,வாய்,மனம், வாக்குகளுக்கு எட்டாத இறைவன் இவைகள் மூலமே பரமனிடம் மனதைச் செலுத்திஅடைய முடியும்.அதற்கு ஆலயமே சிறந்த இடம். எல்லோரும்காடு, மலை, ஓடை என்று சென்று தியானித்து இருக்க முடியாது. ஆகையால்தான் நமது முன்னோர்கள் ஆலயமே சிறந்த முடிந்த முடிவாக கொண்டனர்.

'மாலற நேய மலிந்தவர் வேடமும் ஆலயத்தானும் அரனெனத் தொழுமே' பாடல் பெற்ற தலங்கள்:தமிழ் நாட்டில் எண்ணற்ற சிவத்தலங்கள் அமைந்துள்ளன. சைவ சமயம் தழைத்தோங்கப் பாடுபட்டதிருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் நேரில் சென்று பாடல்களைப் பாடியசேத்திரங்கள் 'பாடல் பெற்ற சிவத்தலங்கள்’ 'எனப்போற்றப்படுகின்றன. இந்த நால்வரும் இறைவனைக்கண்ணுறக் கண்டவர்கள். இறைவனது அருள் ஒளியில் கலந்தவர்கள்.அல்லும் பகலும் இறைவனைஇதயம் என்னும் ஆலயத்தில் வைத்து வழிப்பட்டவர்கள்.

'இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’ என்கிறார் மாணிக்கவாசகர்.' நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாதொருபோதும் இருந்தறியேன்’ என்று பாடுகிறார் நாவுக்கரசர்.' எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை’ என்கிறார் சுந்தரர்;'உள்ளம் கவர் கள்வன்’ என்கிறார் திருஞானசம்பந்தர்.
இறைவனை அகத்தும் புறத்தும் கண்ட இவர்கள், தங்கள் மண்ணுலக வாழ்வை எல்லாம் திருத்தலங்களுக்குச்சென்று, கோவில்களில் இறைவனை வழிப்பட்டுப்பாடுவதிலேயே கழித்தார்கள். சிவனடியார் திருக்கூட்டத்தோடுநடந்து சென்று, தமிழகத்தைச் சிவலோகமாக்கியது ஆலயவழிபாட்டின் வாயிலாகத்தான்! திருக்கோவில்களிலேஇறைவன் முன்பிலே நின்று அருளிச் செய்த பாடல்கள் தாமே தேவார திருவாசகங்கள்.

சிவசோதியில் கலக்கும் பெறும்பேறு பெற்ற நால்வர்பெருமக்களே கோவில் வழிபாட்டின் பெருமையை உணர்ந்துநமக்கு வழி காட்டிஇருக்கும்போது, நாம் அவர்கள் காட்டிய வழியில் செல்வது அறிவுடைய செயலாகும்.

ஆலயங்களில் மூர்த்திகளின் திருவுருவப் பொலிவும் நம்மைப்பரவப்படுத்தவல்லவை.எனவே மாசு மறுவற்ற சிந்தையோடும்,அருள் வேட்கையோடும் கோவிலுக்குச் செல்வோர் இம்மை,மறுமைப் பேறுகளை எளிதில் பெறலாம் என்பதில் சிறிதும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. வரலாற்று சரித்திரம்,வரலாற்று சித்திரம் நமக்கு முன்னால் வாழ்ந்தவர்களின்அனுபவபாடம். காலம் காத்து வைத்திருக்கும் காலச்சுவடுகள். வரலாறு நமது வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக,நம்மை தயார்படுத்தும் நிகழ்ச்சி. மனித சமுதாயத்தின்சிந்தனை வளத்தை விதம் விதமாக பாதுகாத்துவைத்துள்ளார்கள்.கட்டடம்,சிற்பம்,கல்வெட்டு இவைகள் கலையின் பதிவு.கோவில் சிற்பங்கள் ஒவ்வொன்றும் சிந்தனைகளின் வளர்ச்சியை,அவற்றோடு தொடர்பு உடைய வாழ்க்கை நடைமுறைகளின்பிரதிபலிப்பை நயமாக விளக்குகிறது.
தள்ளி நின்றும்,தடவிப்பார்த்தும் நேயமாய் நெருங்கியும் உறவாடினால்அந்தச் சிற்பங்களும், சிலைகளும் எவ்வளவு உரையாடல் நிகழ்த்தும்?!

No comments: