Saturday, July 14, 2007

<>ஆலய நுழை வாசல் - (2) <>


ஆலய நுழை வாசல்...

கோவில் வழிபாடு,
திருவிழா நடைபெறும்
போது அற்புதமான
அலங்காரங்கள் பற்பல
வடிவங்களில் கண்களையும்,
கருத்தையும் கவர்கிறது.
இவைகள் அங்கு கூடியுள்ள
அன்பர்களின் சூட்சும உடல்களைத் தூய்மைப்படுக்கிறது.
மனத்திற்கு இதமான சாந்தி அளிக்கிறது.

மூவேந்தர்களின் அரண்மனை இன்று மண்ணோடு மண்ணாய்ப் போயின. ஆனால் அவர்கள் எடுத்த திருக்கோயில்கள் நம் தமிழ் நாட்டைஅலங்கரிப்பதோடு,
சிறந்த அருள் நிலையங்களாகவும் விளங்குகின்றன.

எகிப்து, ரோம், கிரீஸ், பாபிலோன் முதலிய பழம்பெருமை வாய்ந்த நாட்டின் கோவில்கள் இன்று பாழாகிவிட்டன.அங்கு வழிபாடு நடப்பதில்லை.அக்கால மக்கள்வழிபட்ட உருவங்கள்,சிலைகள் இன்று கண்காட்சிச்சாலையில் வைக்கப்பட்டுவிட்டன. ஆனால் நமது கோயில்கள் இறைவன் உறைவிடமாகவும்,மனம் இறைவன்இடத்தில் லயிக்கும் இடமாகவும், பக்தியோடு வழிபாடு செலுத்தும் அருள் நிலையங்களாகவும் இருப்பதைஎண்ணி எண்ணி இறும்பூதெய்த வேண்டும்.திருக்கோவிலுக்குச் செல்வோர் கோயிலை இறைவன்இருப்பிடமாகவும் அங்கு திருவுருவங்களை இறைவனின் அருளுருவ அடையாளங்களாகவும்நினைந்து வழிபட வேண்டும்.
திருக் கோயில் உள்ளிருக்கும்திருமேனி தன்னைச்சிவனெனவே கண்டவர்க்கும்சிவன் உறைவன் அங்கே - திருநாவுக்கரசர் -
திருக்கோவில்களும்,அங்குள்ள திருவுரு மேனிகளும் நமக்கு இறையுணர்வைத் தூண்டி வளர்ப்பதற்காகநம் முன்னோர்கள்
அன்போடு செய்து வைத்த அரும்பெருஞ் செயல்களின் அருள் தோற்றங்களாகவிளங்குபவை.குறிகளும் அடையாளமும் கோயிலும்நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்அறிய ஆயிரம் ஆரனம் ஓதிலும்பொறியிலீர் மனம் என்கொல் புகாததே!என்கிறார்திருநாவுக்கரசர்.
நமது முன்னோர்கள் கோவிலினுள் உள்ள திருவுருவத்தை ஏதோ கற்சிலையெனஎண்ணவில்லை.அங்கு கடவுளையே கண்டார்கள்.அவரோடு பேசினார்கள். 'ஓங்கி ஆழ்ந்துஅகன்ற நுண்ணியனே’ என்றும், சிந்தையே கோவிலாக கொண்ட எம்பெருமான்திருபெருந்துறை சிவனே’ என்றும்,
விண்ணாகி மண்ணாகி, இத்தனையும் வேறாகிக்
கண்ணார முதமுமாய் நின்றான்'என்றும், இறைவனது
உண்மைத் தன்மைகள் பலவற்றையும்அனுபவித்துப் பாடினார்கள்.கோவிலில் சிறு உருவத்தின் நின்று பாடும்போதும் அவர்கள்அங்கு கல்லிலாயன ஒரு வடிவத்தைக் காணவில்லை.
அன்போடு, உருகி அகம் குழைந்து பாடினார்கள்.
கண்ணப்பர்,காளத்தீஸ்வரர் கோவிலில் உள்ள உருவத்தை
ஒரு கற்சிலைஎன்று எண்ணியிருப்பாரானால் கல்லுக்கு தான்
ருசி பார்த்த மாமிசத்தை உணவூட்டியிருப்பாரா?தன் கண்ணைத் தோண்டிக் கற்சிலைக்கு அப்பியிருப்பாரா? அவர் கடவுளையே கண்டார் .
'பொய்யாருக்குப் பொய்யனாகவும், மெய்யர்க்கு மெய்யனாகவும் உள்ளவர் கடவுள் என்னன் புருக்கி இறைவனை ஏத்துமின் முன்னன் புருக்கி முதல்வனை நாடுமின்பின்னன் புருக்கிப் பெருந்தகை நந்தியுந்தன்னன் பெனக்கே தலை நின்ற வாறே -திருமூலர்-

கோவிலில் உள்ள திருவுருவத்தைக் கல்லாகக் நின்று காட்சியளிக்கிறார் இறைவன்.இராமகிருஷ்ணர், ஆலய வழிபாட்டின் மகிமையை சமீப காலத்தில் வாழ்ந்து மறைந்தவர்.தாம் பூஜை செய்து வந்த காளியின் திருவுருவத்தோடு அவர் பேசினார்; காளியும் அவரோடுபேசினாள்.
தாம் வழிப்படும் அம்பிகையின் திருயுருவத்தோடு உயிருண்டா இல்லையா என்றுபஞ்சை அதன் மூக்கின் முன் வைத்துப் பரிசோதிப் பார்த்துஅத்திருவுருவிற்கு உயிருண்டு என்று துணிந்தார்.
தெய்வம் என்றால் அது தெய்வம். வெறும் சிலை என்றால் அது சிலைதான். உண்டு என்றால் அது உண்டு.இல்லை என்றால் அது இல்லை. கண்ணதாசனின் வரிகள் கவி.கம்பனை நினைவூட்டுகிறது.
யுத்த காண்டக்கடவுள் வாழ்த்துப் பாடல்''ஒன்றே என்னில் ஒன்றே யாம்பலவென்றுரைக்கில் பலவே யாம்!அன்றே என்னில் அன்றே யாம்ஆம் என்றுரைக்கில் ஆமே யாம்!

இன்று நம்மில் பலர் கோவிலுக்கு போகும் கடமை மறந்துவிட்டனர்.படித்தவர்களில் பெரும்பாலோர்ஆலய வழிபாட்டை அறவே கைவிட்டனர். ஏதோ பாமர மக்களுக்கும், பெண்களுக்குதான் ஆலயவழிபாடு என்று எண்ணவும் செய்கிறார்கள். வாரத்திற்கு ஒரு முறையாவது இல்லறத்தாரோடுசென்று வழிபாடு செய்யும் நியதியை மேற்கொள்ளவோமாக. அப்படி செல்லும்போது மனம் அடங்கிஅமைதியான சிந்தையுடன்,பக்தியுடன் இறைவன்பால்செலுத்தினால் இன்மையிலும்,
மறுமையிலும் இன்பம் காணலாம்.

''நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவாநித்தலும் எம்பிரானுடைய கோவில் புக்குப்புலர்வதன் முன் அலகிட்டு
மெழுக்கும் இட்டுப்பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்து
பாடித்தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்சங்கரா சயபோற்றி என்றும்அலைபுனல்சேர் செஞ்சடை எம் ஆதீ என்றும்ஆரூரா என்றென்றே அலறா நில்லே'’ - -மாணிக்கவாசகப் பெருமான்,
"தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகிமுனிவி லாததோர் பொருளது கருதலும்"(போற்றித் திருவகவல்) ஒரு சமுதாயத்தில் அல்லது ஊரில் எத்தனையோ பெரிய மனிதர்கள் தோன்றினாலும், வாழ்ந்தாலும்,அவர்களை எல்லாவிதத்திலும் குற்றமிலாதவராகப் பார்க்க எல்லாராலும் முடியாது. மனிதனுக்குமனிதன் பார்வைகள் வேறு பட்டுக் கொண்டே இருக்கும். அம்மனிதனின் வாழ்வும் நிலையிலாததது.சில தலைமுறைகளுக்குப் பின்னர் மக்கள் அம்மனிதரை மறந்து விடக்கூடும்.
அதனால்தான், எல்லோராலும் குற்றம் சொல்லமுடியாத பொருளாக, எல்லோருக்கும் உயர்வானதொருபொருளாக, ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரு பொருளாக, எல்லாக் காலங்களிலும் நிலைத்த பொருளாகஇறைச் சித்தாந்தம் தோன்றி அந்த இறைவனைக் கோயிலுக்குள் மனித குலம் கண்டு வருகிறது.

அதனால்தான், ஒவ்வொருவரும் கோயிலுக்குச் சென்று இறைவனை, மேலோனாக, அன்பனாக,குழந்தையாகஏன் காதலியாகக் கூடக்கண்டு இன்புற்றுவருகிறார்கள். ஒவ்வொருவரின் அகத்தையும் இறைவன் அறிவான்.அன்போடு நாம் சென்று இறைவனை கோயிலில் சென்று வழிபட்டு நமக்கு நிம்மதி கிடைப்பதே நமதுஇந்தத் தத்துவத்தால்தான்.
எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டவன் இறைவன்.
அவன்சன்னதியில் எல்லோருக்கும் நிம்மதி கிடைக்கிறதுஎன்றால் இதனை விட வேறு உயர்வான பொருள், முனிவு இலாத பொருள் வெறென்ன இருக்க முடியும்?
"தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகிமுனிவி லாததோர் பொருளது கருதலும்"

No comments: