Monday, July 23, 2007

வைராவிமட காளியம்மன் கோயில்



"வைராவிமட காளியம்மன் கோயில்"


காளி எனும் சொல்லுக்குக் கருமை நிறம் பொருந்தியவள்,

பால ரூபிணி என்றும் பொருள்.கருமையான நிறத்துடன்

மிகுந்த கோர வடிவுடையவள் காளி என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.ஆனாலும் அவள் கருணையே வடிவானவள்

என்றும் கூறுகின்றன.


எங்கும் வியாபித்து இருப்பவள்காளி. அவள் கருமை நீலம்

கொண்டவள். கடலைப் பார்க்கும்போது அது நீல நிறமாய்காட்சியளிக்கும்.கடல் நீரைக் கையிலேந்தி

பார்க்கும் போது நீல நிறம் மாறியிருக்கும்.இதன்

பொருள் அவள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளாள்

என்று பொருள்.


ஏழாவது கர்ப்பமாகப் பிறக்கவேண்டிய கிருஷ்ணனின் கர்ப்பத்தினைஎட்டாவது கர்ப்பமாக மாற்றிஅமைந்ததால்

கருமாரியாகப் பெயர் பெற்றாள். சூரியன் மறைந்தாலும்,

பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் மறையாதுஎன்று எதற்கும் அஞ்சாது

நாடு ஆண்ட வெள்ளையர்கள், அம்மனுக்கு மட்டும் மிகவும்

அஞ்சி நடுங்கினார்கள்.அம்மை நோய் என்று கேள்விப்பட்டாலே இருநூறு மைல் சென்று ஒளிந்து கொள்வர்.


பெரும்பாலும்நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும்

கண் கண்ட தெய்வமாக விளங்கும் மகாமாரி, தன்னைச்

சரணடைந்த ஏழை மக்களின் வினையை வேப்பிலையால்

நீக்கி வருவது கண்கூடு.தமிழ் இலக்கியத்திலும்,பக்தி

இலக்கியத்திலும் சரி தனித்தன்மைக்குத் சான்றாக விளங்குகிறாள்.


மாணிக்க வாசகரின் திருவெம்பாவையில் பாடல்:-


‘’முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்

என்னத் திகழ்ந்து அம்மை ஆளுடையாள் இட்டிடையின்

மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்

பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்

தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னியவன் நமக்கு முன்சுரக்கும்

இன்னருளேஎன்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!


கடந்த காலங்களில் இந்தியாவிலிருந்து வந்த இந்துக்கள் பலர் தாங்கள்வாழும் இடங்களில் பட்டினி,பசி, நோய்,வறுமை ஆகியவற்றிலிருந்தும், நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம் கல்வியில் சிறந்து விளங்குதல்,போன்றவைகளை வழங்கவும், தங்களைக் காக்கவும் தமது முன்னோர்கள் இஷ்ட தெய்வங்களை வணங்கியும்,அத்தெய்வங்களையே சிலைகளாக வைத்து பூசித்தும் வந்துள்ளார்கள்.


வைரவிட காளியம்மன் ஆலயம் ஒரு நூற்றாண்டு வரலாற்றை

கடந்த ஆலயமாகும்.இக்கோயில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.


வைராவிமட காளியம்மன் ஆலயம் ஒரு நூற்றாண்டு வரலாற்றை கடந்த ஆலயமாகும்.


சிங்கப்பூரில் பழைமை வாய்ந்த ஆலங்களில் இதுவும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில்இவ்வாலயம் கினினி சாலையில் அமைந்திருந்தது. இந்த இடம் மலாயன் இரயில்என்னும் மலாயாவுக்குச் சொந்தமான நிலம். அந்தக் காலக்கட்டத்தில் இரயில்மூலம் மலாயா செல்லும் சிங்கப்பூர் மக்களுக்கு இந்த வழித்தடத்தின் மூலம்தான்சென்றுள்ளார்கள்.


தற்போது அமைந்திருக்கும் தண்டாயுதபாணி கோயில் டோங்ரோட்டிலிருந்து ஆச்சர்ட் ரோடு வழியாகக் கிளினி ரோட்டைக் கடந்து சிங்கப்பூரின்வடபகுதியில் அமைந்திருக்கும் உட்லாண்டு வரை செல்லும் இரயில் தடத்தில்இந்த வைராவிமட காளியம்மன் கோயில் சிறு குடிலாக அமைந்து இருந்தது.


ஆங்கில பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சாலை போடும் பணி, இரயில் தடம் அமைக்கும்பணி, தோட்ட வேலை போன்ற உடல் உழைப்பு பணியில் மிகுதியாக இருந்தவர்கள்தமிழ்நாட்டிலிருந்து வந்த இந்தியர். எனவே தங்களுக்கு ஒரு வழிப்பாட்டுத் தலம்வேண்டுமென்று எண்ணி இரயில் நிர்வாகத்திடமிருந்து நிலம் வாங்கி இந்த வைரவிடகாளியம்மனை ஒரு சிறுகுடிலில் வைத்து வழிபட்டுள்ளனர்.


காலப்போக்கில் இரயில் தடம் விரிவாக்கத்தில் நிர்வாகத்திற்கு நிலம் தேவைப்படவேமாற்று இடமாக ஆச்சர்ட் ரோடு பகுதியில் கோயிலுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.சில காலத்திற்குப் பிறகு மீண்டும் அரசாங்கம் அந்த இடத்தை நகர மேம்பாட்டுக்காகவேண்டவே, மாற்று இடமாக 1921-ல்,21,சோமசட் ரோட்டில் இடம்கொடுக்கப்பட்டது.
அந்த இடத்தில் ஒரு சிறு வீடு போன்ற அமைப்பில் வைராவிமட காளியம்மன் கோயில் இயங்கத் தொடங்கியது. 1933-ல் இவ்வாயலம் இந்து அறக்கட்டளைவாரித்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதே ஆண்டு 6-ந் தேதி, செப்டம்பர்மாதம் புதிய கோயில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.


8854 ச.அடி கொண்ட வைராவிமட காளியம்மன் கோயில் 1970-ல் நகர சீரமைப்பு,விரிவாக்கதிற்காக அரசாங்கம் மீட்டு கொண்டது. அச்சமயம் இப்போது ஆலயம்அமைந்துள்ள இடமான தோ பா யோ, வீடமைப்பு பேட்டை துரித வளர்ச்சிகொண்டிருந்தது. ஆகவே, மக்கள் தேவைக்கும்,வழிபாட்டுக்கும் புதிய வீடமைப்புபேட்டைக்கு அரசாங்கம் நிலம் கொடுத்தது. மீண்டும் புதிய ஆலயம் தோ பா யோ,

லோரோங்:8 –ல் எழுந்தது. 1986-ல் மார்ச் மாதம், 27-ம் நாள் கும்பாபிஷேகம்நடைபெற்றது.


இவ்வாலயத்தில் மூலவராக அன்னை வைராவிமட காளியம்மன் கருவறையில் வீற்றிருக்கிறாள்.மற்றும் விநாயகர், சுப்ரமணியம் வள்ளியம்மன்,துர்க்கை,அங்காள பரமேஸ்வரி, ஐயப்பன்,பெரியாச்சி,மதுரைவீரன்,கல்யாண சுந்தரரேசர், நவகிரகங்கள் என இவ்வாலயத்தில்வழிபாடும் நடக்கிறது.
குருவாயூர் ஐயப்பன் சந்திதியில் ‘துலாபாரம்’ அமைந்துள்ளது.


சிங்கப்பூரில் துலாபாரம் அமைந்த ஓரே ஆலயம் இதுதான்.
இங்கு சரஸ்வதி பாலர் பள்ளியும் முழு நேரமாக நடைபெறுகிறது. பொது நோக்கில்இலவச சட்ட ஆலோசனை சேவையும், சமூக சேவையும் வழங்கப்படுகிறது.முக்கிய விழாவாகச் சித்ரா பெளர்ணமி,பிரம்ம உற்சவம்,சந்தன குட அபிஷேகம்,பெரியாச்சி பூஜை,மகர விளக்கு, அங்காள பரமேஸ்வரி பெளர்ணமி பூஜை சிறப்பாகநடைபெற்று வருகின்றன.


ஆலய முகவரி2001 Toa Payoh Lor 8 Singapore 319259

Tel: 6259 5238

Fax: 6258 7677

Email:
mailto: http://www.blogger.com/

ந ன் றி :- சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம்


கிருஷ்ணன்,

சிங்கப்பூர்.


இந்தக் கோயிலும் சிவன் கோயிலும் ஆர்ச்சர்ட் சாலையில் (Orchard) அமைந்திருந்தன. ஆச்சர்ட் என்பது பழத்தோட்டம் என்ற பொருள்படும். ஆங்கிலேயர்கள் சிங்கப்பூருக்கு வந்தபோது பழமரங்களை நட்டு இப்பகுதியில் தோட்டங்களை உருவாக்கினர். அவற்றில் இந்தியர்கள் - குறிப்பாகத் தமிழர்கள் வேலை செய்தனர். ஆகவேஇப்பகுதிகளில் இரண்டு கோயில்களை நிறுவியதில் ஆச்சரியமில்லை. வைராவிமடகாளியம்மன் கோயில் சாமர்செட் ரோடில் (somerst road) கடைசியாக இருந்து பின்னர் தற்போதுள்ள தோபாயோ வீடமைப்பு பேட்டைக்குச் சென்றது. சாமர்செட்ரோடில் அப்போது நாள் சம்மள ஊழியர்கள் குடும்பம் குடும்பமாக அவர்களுக்குவழங்கப்பட்ட குவார்ட்டசில் வசித்துவந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள்.இவர்கள்தான் இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தார்கள். ஆச்சர்ரட் ரோடில்இருந்த சிவன் கோயிலுக்குப் படித்தவர்களும் செல்வந்தர்களும் சென்று வந்தனர்.வருவாய் அதிகம் இல்லாத இந்தக் கோயிலுக்கு செளத் பிரிட்ஜ் சாலையில் உள்ள மாரியம்மன் தேவஸ்தானம் உதவி வந்தது சாமர்செட் ரோடிலிருந்து வேறு இடத்திற்கு கோயில் மாற வேண்டும் என்ற நிலைவந்தபோது இக்கோயில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் இயங்கினாலும் நிதி திரட்டும் பணி முடுக்கிவடிப்பட்டது. அதில் நண்பர் மகேஸ்வரலிங்கத்துடன் நானும்கொஞ்சம் ஈடுபட்டேன். நிதி திரட்டும் பொருட்டு பெங்களூர் ரமணியம்மாளை அழைத்து வந்தோம். அவரின் பஜனைப் பாடல் கச்சேரியை மாரியம்மன்தேவஸ்தானத்தில் நடத்தினோம். நான் ஒரு சாக்கை எடுத்துக்கொண்டு காசைக்கேட்டு கூட்டத்திரனரிடையே வந்தபோது, "அதோ வாராண்டி பழனி ஆறுமுகம்உங்களைத் தாண்டி. அவன் சாக்கில் போடுங்கடி ஆயிரம் பணத்தைத்தாண்டி" எனதனது பாடலை சற்று மாறிப் பாடி எல்லோரையும் அசத்திவிட்டார். அவர் தொடர்ந்துநடத்திய நிகழ்ச்சி வழி சாக்கு சாக்காக நாங்கள் பணம் திரட்டினோம்.
பெங்களூர் ரமணியம்மாள் மிகவும் நெடிய உருவம் கொண்டவர். பெண்களுக்கும்சாதாரணமாக இலேசான உரோமம் உதடுகளின் மேல் இருப்பது வழக்கம்தான். ஆனில் இவருக்குள்ள உரோமம் மீசையைப் போலவே இருக்கும். அவரை நாங்கள் ரேஸ்கோர்ஸ் ரோடில் பி கோவிந்தசாமிப் பிள்ளைக்குச் சொந்தமான வீட்டில் தங்கவைத்திருந்தோம். ஒரு நாள் இரவு வீட்டிற்கு வெளியே திரு மகேஸ்வரலிங்கத்தின் வாகனத்திற்காகக் காத்துகொண்டு நின்றுகொண்டிருந்தார். அவர்தான் வாகனத்தில் மாரியம்மன்கோயில் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வார். நானும் பெங்களூர் அம்மாளுடன்காத்துக்கொண்டு நின்றிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டிலிருந்து அரவாணிகள்பலர் அழகான சேலைகள் மற்றும் மேற்கத்திய உடைகள் அணிந்து பெங்களூர் இரமணியம்மாளை உரசாத குறையாகக் கடந்து சென்றனர். நிலைமையைஉணர்ந்துகொண்ட அவர், "என்ன பழனியப்பா, என்னை இந்த இடத்திலாதங்கவைத்தாய்" எனக் கேலியாகக் கேட்டு அவர் ஊர் திரும்பும் வரை அதேயே பலதடவை வேடிக்கையாகச் சொல்லிக்கொண்டே இருந்தார்.
இங்கு வந்து சென்ற ஓராண்டிற்குள் அவர் இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு மிகவும்வருந்தினோம்.
அடுக்குமாடி வீடு பேட்டைகளுக்குச் சென்ற இரண்டாவது கோயில் எனும் சிறப்பும்இக்கோயிலுக்கு உண்டு. முதல் கோயில் உருத்திரகாளியம்மன் கோயில்.

- பழனியப்பன் ஆறுமுகம், சிங்கப்பூர்.

1 comment:

Earn Staying Home said...

உங்கள் ப்ளாக் நல்ல ப்ளாக்