Monday, July 23, 2007

ஸ்ரீ தரும முனீஸ்வரன் ஆலயம்.


Serangoon North -Darma Muneeswaran -1

ஸ்ரீ தரும முனீஸ்வரன் ஆலயம்

றைவன் படைப்பில் மனிதப் பிறப்பு உயர்ந்தது.
மாணிக்க வாசகர், ‘’எல்லா பிறப்பு இளைத்தேன்
எம்பெருமானே, இன்று இந்த மனித பிறப்பில்
உன்னைக் கண்டேன்..’’என்று மனமுருகிப் பாடுகிறார்.
இந்த மனித பிறப்பில்தான் மனிதன் ஆன்ம ஞானம்
பெற்று, அஞ்ஞானம் நீங்கி வாழ இறைவனோடு
கலந்துறைகிறான்.
தமிழர்கள் இறை உணர்வில், இறை நம்பிக்கையில் மிகுந்த
நம்பிக்கை கொண்டவர்கள்.ஆகையால்தான் தாங்கள் சென்று
குடியேறிய நாடுகளில், இடங்களில் வழிபாட்டுத் தலங்களை அமைத்துவணங்கி வந்துள்ளார்கள். அந்த இறை நம்பிக்கையின் அடிப்படையில் சிங்கப்பூரில் இந்து பெருமக்களும்,பக்தர்களும்
வழிபடப் பல ஆலயங்கள் இருக்கின்றன.`அவ்வகையில்
சிராங்கூன் வடபகுதியில் அமைந்திருக்கிறதுதரும
முனீஸ்வரன் ஆலயம்.பல்லாண்டுகளுக்கு முன்னம் ஓர்
அரச மரத்தடியின் கீழ் முனீஸ்வரனை ஸ்தாபித்துவழிபட்டு வந்துள்ளனர்.

ஆலயம் உருவாகும் முன்பே அந்த இடத்தில் வளரும் மரம் தல விருட்சம் என்று அழைக்கப்படும்.ஒவ்வோர் ஆலயத்திற்கும் தல விருட்சம் வேறுபடும். அருள்மிகு தரும முனீஸ்வரன் ஆலயத்தில் தலவிருட்சமாக விளங்குவது அரச மரமாகும்.

மரம் மானுடம் பெற்ற வரம் எனலாம். தேவலோகக் ‘கற்பகத் தரு’ கேட்டதைத் தரவல்லது என்பர்.தென்னை, வாழை மரங்கள் எல்லா பாகங்களும் பயன்படுவதால் அவற்றைக் கற்பகத் தரு என்பர். மரத்தின்பட்டைகளை உடையாகப் (மரவுரி) பயன்படுத்தினர்.மரத்தின் காய்,கனி,இலை,மரத்தண்டு,வேர் என சகலமும்பயன்படுகின்றன. இறையுணர்வு தொடர்பான நிறைய செய்திகள் மரத்திற்கு உண்டு. மரங்களில் நான்அசுவத்தமாக (அரச மரமாக) இருக்கிறேன் என்கிறான் கண்ணன் கீதையில்.

ஆலமரத்தை வியந்து மேனாட்டு அறிஞர் பிரியர்சொடானஸ் (Friar Jorgans) கி.பி. 14 ஆம்நூற்றாண்டில் கூறியிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது. ‘இன்றும் எத்தனையோ வகையான மரங்கள் இங்குவளர்கின்றன. ஆல மரங்கள் பார்ப்பதற்கு விந்தையாக இருக்கின்றன. அவற்றின் வேர்கள் மேலிருந்து வளர்ந்துவிழுதுகளாகக் கீழே இறங்குகின்றன. அவை சிறிது சிறிதாய்கீழிறங்கி இறுதியில் நிலத்தில் புதைந்துவிடுகின்றன.நாளடைவில் அவை மரத்தின் முதன்மையான அடிமரத்தைப் போல அடிமரங்களாகவே மாறிவிடுகின்றன. அவைவளைவுகளைப் போல தோன்றுகின்றன.
இவ்வாறு ஒரே மரத்திலிருந்து இருபது, முப்பது அடிமரங்கள்ஒன்றோடொன்று இணைந்து நிற்கும் விந்தையே நாம் இங்கு காண்கிறோம். இந்த அற்புதத்தை நான்கண்டு வியப்படைகிறேன். அதைச் சொற்களால் வர்ணிப்பது எளிதன்று’ என்கிறார்.
அரசமரம் உலகத்திலுள்ள மரங்களுக்கெல்லாம் அரசனாக விளங்குவதால் இப்பெயர் பெற்றது.தரும முனீஸ்வரன் ஆலயத்தில் உள்ள அரச மரம் சுமார் 80 ஆண்டுகள் பழமையான மரமாகும்.ஆலயம்அமையும் முன்னமே இந்த அரச மரத்தடியில் முனீஸ்வரர் இருந்ததாகவும்,அதன் பிறகே இவ்வாலயம்உருவாகி இருக்கின்றது என்றும் கூறப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், 93 வயதுதிரு.கோவிந்தசாமி எனும் பெரியார், ‘தான் 1933-ஆம் ஆண்டு தமிழ் நாட்டிலிருந்து சிங்கப்பூர்வந்தாகவும், ஆலயம் அமைந்துள்ள ஜாலான் வி யோ பகுதியில் குடியேறியதாகவும் கூறுகிறார்.அப்போது கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ‘வெற்றிலை பாசா’ என்ற பெயர் வழங்கப்பட்டுவந்ததாகவும், நிறைய மாடுகள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்ததால் இந்தக்கோயிலுக்கு‘மாட்டு தாண் கோயில்’ என்று வழங்கப்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இக்கோயில்அமைந்திருக்கும் இடம் இரப்பர்
எஸ்டேட்டாகவும் இருந்ததாக வாய்மொழி வரலாறாகக்
கூறினார்.
தற்போது கோயில் தல விருட்சமாக விளங்கும் அரசமரம்
பெரியவர் திரு.கோவிந்தசாமி முதன்முதலாக கோயிலைத்
தரிசிக்க வந்தபோது (1933-ம் ஆண்டு) சிறிய மரமாக இருந்தது.யாரேனும் உடல்நலக்குறைவால்பாதிக்கப்பட்டு
இருந்தால் கோயிலில் சிறிது நேரம் உட்கார்ந்து சென்றால்
உடல் நிலைசரியாகிவிடும் என்றும் தமக்கும் அப்படியொரு
அனுபவம் நிகழ்ந்தாகக் கூறினார்.
ஆலய தோற்றம்....!

1900 –இல் இப்பகுதியில் வாழ்ந்த சுமார் 30 இந்தியகுடும்பங்கள்
எளிய முறையில் தரும முனீஸ்வரனை வணங்கி வந்துள்ளார்கள்.
செம்பவாங் இரப்பர்த் தோட்டத்தைச் சேர்ந்த சமூக தலைவர்களான அமரர் பிச்சைப் பிள்ளை, அமரர்அழகப்பன் கோனார் ஆகியோர் முயற்சியால், அப்பகுதி வாழ் மக்களின்காவல் தெய்வமாக இந்தக் கோயில் எளியமுறையில் கட்டப்பட்டது.

வளர்ந்த ஆலமரத்தினை வெட்ட முயன்றபோது ஏதோ ஒரு
சக்தி வெட்ட முடியாது தடுத்து ஆட்கொண்டகாரணத்தால்
தோல்வி அடைந்தனர். அப்போது அங்கு வாழ்ந்த குடியிருப்
பாளர்கள் பலரும், இக்கோயிலைப்பராமரித்துக் கொண்டும்,
மாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்த பால்கார சின்னையாவும், பால்கார பொன்னையாஎன்ற இரண்டு பால் வியபாரிகளும் முனீஸ்வரனின் நிழலுருவைக் கண்டதாகக் கூறியுள்ளனர்.

1969-ஆம் ஆண்டு முதல் ஆலய விரிவு பணி தொடங்கி 1985
வரை நீடித்தது. இக்கால கட்டத்தில்விநாயகர், முருகன், நாகர்,
பைரவர் ஆகிய மூர்த்திகளுக்குத் தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டன.

மறுகுடியேற்றம், நகர சீரமைப்பு காரணமாக மக்கள்
வீடமைப்பு பேட்டைகளில் குடிபெயர்ந்தனர்.தரும முனீஸ்
வரன் ஆலயம் அமைந்திருந்த பகுதியில் சிராங்கூன் கார்டன்,
சிராங்கூன் நார்த், சிராங்கூன்செண்டரல், அங் மோ கியோ, ஹவ்
காங், இயோ ச்சூ காங், பயலெபார், சிலேத்தார் ஹில் ஆகிய
வீடமைப்பு பேட்டை அமைந்திருக்கிறது.

இவ்வட்டார இந்து மக்களுக்கு ஏற்ற வழிபாட்டுத் தலமாக
தரும முனீஸ்வரன் ஆலயம் அமைந்திருந்தகாரணத்தால்
பக்தர்களின் வருகை அதிகரிக்கவே ஆலய மேலாண்மை
குழு இவ்வட்டார நாடாளுமன்றஉறுப்பினர் உதவியுடன்
சமய, சமூகத் தேவைகளை நிறைவேற்றும் வகையில்
ஆகம முறைப்படி திருக்கோயில்அமைக்கக் தீர்மானித்து,
சுமார் 1400 சதுர மீட்டர் அளவில் இப்போது அமைந்திருக்கும்.
இடத்திலேயே புதியஆலயம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
புதிய ஆலயத்தைக் கட்டும் பணி 11.5.98 –ல் தொடங்கி 1999- ம்ஆண்டு நிறைவடைந்தது. ஏறத்தாழ 3.5 மில்லியன் செலவில் கம்பீரமான ஆலயம் எழுந்தது.

மூலவர் தரும முனீஸ்வரர் வடக்கு முகமாக ஆலயத்தின்தென்பகுதியில் கருவறையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.முனீஸ்வரர் சன்னிதான விமானத்தின் எண்கோண வடிவமைப்பில் இருக்கிறது. ஓடுகளால் வேயப்பட்ட கூரையில்தங்க முலாம் பூசிய 36 திரிசூலம் உள்ளது.
இராஜகோபுரத்தின் இரண்டாவது தள விமானத்தில்
சுதையிலானசகல சிற்பங்களும், முனீஸ்வரர் சிற்பம்,
சிவபெருமானின் தனித்த சிற்பங்களும்,, மூன்றாவது
கோபுரம் தளத்தில்மாரியம்மன், முருகன், விநாயகர்,
இராமர், சீதை, இலட்சுமணன், அனுமன், கங்காள மூர்த்தி,
பைரவர் ஆகியசுதை சிற்பங்கள் அலங்கரிக்கின்றன.

புனித மரமான அரச மரத்தின் கீழ் தென்புறம் தொன்றுதொட்டு
வழிபட்டு வந்த நாகர் சன்னிதி நான்குகால் மண்டபமாக
விமானத்துடன் அஷ்ட நாகங்கள் சிற்பமாகவும் அமைக்க
பெற்றுள்ளது. சிங்கப்பூரில் அமைந்திருக்கும்ஆலயங்களில்
பெரிய அளவில் அமைந்திருக்கும் நாகர் சிலை இதுதான்.
ஏற்கனவே ஆலயம் இருந்த இடத்திலேயே, அரச மரத்தைச்
சுற்றி ஆலயம் கட்டப்பட்டுள்ளது. விநாயகர்,முருகன், நாகர், முனீஸ்வரன், ராமர், கங்காளமூர்த்தி, மாரியம்மன்,பைரவர்
ஆகிய மூர்த்திகளுக்குச் சன்னிதானங்கள்அமைக்கப்
பட்டுள்ளன.

பல் நோக்கு கொண்ட மண்டபம், நூலகம், வகுப்பறைகள்,ஊழியர் வசிப்பிடம் போன்றவைகள் நவீன முறையில்முறையில் கட்டப்பட்டுள்ளன. சமூக நடவடிக்கைகள், மருத்துவம், சட்ட
தொடர்பான ஆலோசனைகளும் இங்குவழங்கப்படுகின்றன.

முக்கிய விழாக்கள்.இவ்வாலயத்தில் முக்கிய விழாக்களாகச் சித்ராபெளர்ணமி, வைகாசி விசாகம், ஆடி மாத பூஜை, ஆவணிமாத விழா,புரட்டாசி, நவராத்திரி விழா, ஐப்பசி மாத விழா,கார்த்திகை, மார்கழி மாத விழா, மாசிமகம், பங்குனிமாத விழாக்கள் போன்ற விழாக்களும், பூஜைகளும் நடைபெறுகின்றன.


ஆலய முகவரி:-
Darma Muneeswaran Temple,

57, Serangoon North Ave.

1Singapore. 557 430

Tel :62805058 / Fax. 62803227

No comments: