சிவ துர்க்கை கோயில்
''''''''''''''''''''''''''''''''''''''''
குனிந்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்த முடைய வெடுத்த பொற்பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டும் தேயித்த மானித்தே
-திருநாவுக்கரசர்,தேவாரம்
ஆதியந்தமில்லா அருட்பெருஞ் ஜோதியாய் விளங்கி,
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்ஆனந்த
மூர்த்தியாகி, அருளோடு நிறைந்த, இறைவன் குடிகொண்ட
புனித இடத்தைக் கோவிலென்றும்ஆலயம் என்றும்,
திருநாமங்கள் சூட்டி அழைக்கின்றோம்.
திருக்கோயில்கள் இல்லாத ஊரும், திருவெண்ணீறு அணியாத மக்கள் வாழும் ஊரும்,இலட்சுமி குடிகொள்ளாத ஊரும், ஊர்களாகா என்பது வேத வாக்கு.
வெறும் கோயில் மட்டும் இருந்து விட்டால் மட்டும் போதாது. இறைவனின் கருணைத் திருமேனி கொண்டதிருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி தினம் தோறும் பூஜைகள், உபயங்கள், திருவிழாக்கள் போன்றநிகழ்ச்சிகள் அவ்வப்போது அங்கு நடைபெற்றுக் கொண்டு வந்தால்தான் அது இறைவன் குடிகொண்டிருக்கும்கோயில்களாகும்.
தென்கிழக்காசியாவிலே சிறந்த மையமாக விளங்கும் சிங்கப்பூரிலேமண்ணுமலை (இப்போது பொத்தோங் பாசிர்)என்ற இடத்தில், கருவறை, அர்த்த மண்டபம், பிரகாரம், இராஜகோபுரம் என்று சிற்ப சாஸ்திரப்படி அமைந்துள்ளதுசிவன் கோவில்.
இன்று துர்க்காலெட்சுமி கோவிலென்றும், சிவம் கோயிலென்றும் சிங்கப்பூர், மலேசியா மக்களால் போற்றிவணங்கி வரும் இக்கோயில் ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்தது. ஆரம்பத்தில் காலத்தில் பழைய ரூமா மிஸ்கின்என்ற இடத்தில் இவ்வாலயம் இருந்தது. அந்த இடம் காவல் துறை இருந்த இடமுமாகும்.அவ்வாழ் மக்களின் பெறும் முயற்சியின் காரணமாக செயிண்ட் ஜார்ஜஸ் சாலைக்கு மாற்றப்பட்டது.அத்தாப்புக் (கூரை) குடிசைக்குப் பதிலாகப் புதிய கோயில் கட்ட நிர்வாகம் முனைந்தது.
1962- ஆம் ஆண்டு வாக்கில், திரு.பி. ரெங்கநாதன், திரு.அருணாசலம் போன்ற பெரியவர்கள்தங்கள் சொந்தச் செலவிலேயே இரதம் ஒன்று கட்டிக் கொடுக்க, திரு. கே.கே. இராமசாமிஎன்ற பக்தரின் பெருமுயற்சியால், இரத ஊர்வலத்துடன் காமன் பண்டிகை போன்ற பெருவிழாவினைக்கொண்டாடி வந்திருக்கிறார்கள்.
1965-ம் ஆண்டு வாக்கில் மன்மதன் கோயில் என்ற பெயரில் உரிமம் பெற்று, புதிய அமைப்பில்,கோயில் கட்ட எண்ணினார்கள் ஆலய நிர்வாகிகள். நாகரீகமும், அறிவு வளர்ச்சியும், இன்றையமறுமலர்ச்சிக்கும், சமுதாய தேவைக்கும் ஏற்ப கோவில் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்புதிய கோவில் கட்டுவதற்கு அரும்பாடு பட்டிருக்கிறார்கள்.
கோயில் தர்மகர்த்தாவாக இருந்த திரு. வீ.ஆர். கோபால் சாமி அவர்களின் சேவைபெரிதாக அமைந்துள்ளது.தனது சொந்தச் செலவிலேயே துர்க்கா லட்சுமி சிலை அமைத்து,அதன் கும்பாபிஷேகமும் செய்துள்ளார். நகர மறுசீரமைப்பு வீடமைப்பு நிலம் அரசாங்கத்திற்குத்தேவைப்பட்டதால் இப்போதுள்ள பொத்தோங் பாசிரில் பகுதியில் 1000 சதுர மீட்டர்நிலத்தினை 280,000 வெள்ளிக்கு வாங்கப்பட்டது.
புதிய இடத்தில் வேத முழக்கத்தோடு 22.1.1983 - ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்யப்பட்டது.அரசாங்கத்தின் முழு உரிமம் பெற்ற இவ்வாயலம் 27 –1-1991-ம் ஆண்டு, ஞாற்றுக்கிழமை மிகவிமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தேறியது.
கோயில் அமைப்பு....!
கோயில் அமைப்புகள் பொதுவாகப் பேரண்ட சிற்றண்ட அமைப்பின் பின்னணியொத்தது.பேரண்டம் என்பது பிரபஞ்சத்தையும், சிற்றண்டம் என்பது மனித உடலையும் குறிக்கும்.பேரண்டத்திலுள்ள எல்லாம் சிற்றண்டத்திலும் உள்ளது.பிரபஞ்சத்தின் சிறு வடிவம்தான் மனிதன்.பேரண்டத்தின் ஜீவ சக்தி ஈஸ்வரன். அவனே பிரபஞ்சத்தில் மனிதனின் ஆத்மாவாகவும் இருக்கிறான்.
புதனே சுவாசப்பை, சுக்கிரனே இருதயம், சூரியனே மூளை, அங்காரகன் கை, சந்திரனே வயிறு,குரு குறி, சனி கால்கள், கோயில்களே சிவம்.இத்தகைய கோயில் பொதுவாகக் கருவறை,அந்தராளம், அர்த்த மண்டபம், நிருத்த மண்டபம், விருஷ மண்டபம், பிரகாரம், பலிபீடம்,கொழி மரம், பரிவார ஆலயங்கள், கோபுரம், திருக்குளம்,மதில் ஆகிய அங்கங்கள் உடையதாகஇருக்கும். அந்த அமைப்பில் அமைந்த ஆலயமே இவ்வாலயம்.
கருவறை. கர்ப்பக்கிரஹம் என அழைக்கப்படும் மூலஸ்தான மூலவராகச் சிவலிங்கம் அமைந்துள்ளது.இந்த மூலஸ்தான அமைப்பு கெஜபிருஷ்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தட்சணா மூர்த்தி கர்ப்பக்கிரஹத்தில் அமைந்துள்ள கோஷ்டத்தில் தெற்கு நோக்கி அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.லிங்கோத்பவர் கர்ப்பக்கிரஹத்தில் அமைந்துள்ள கோஷ்டத்தில் தெற்கு நோக்கி அமர்ந்த நிலையில்அமைக்கப்பட்டுள்ளது.பிரம்மா கர்ப்பக்கிரஹத்தில் அமைந்துள்ள கோஷ்டத்தில் தெற்கு நோக்கிஅமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
அர்த்த மண்டபம் கர்ப்பக் கிரஹத்தோடு ஒட்டி முன்புறத்தில் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தில்அம்மன் தெற்கு நோக்கியும், நிருத்த கணபதி தெற்கு நோக்கி நிருத்த (நாட்டிய) நிலையிலும்,விஷ்ணு துர்க்கை வடக்கு நோக்கியும்அமைந்துள்ளன.`மூலஸ்தானத்தை ஒட்டியதாகக் கிழக்குநோக்கி அமைந்துள்ள பீடத்தில் முருகர் ஆலயம் அழகிய கட்டிடக்கலையுடன் அமைந்துள்ளது.
இடது பாகத்தில் மூலவரை நோக்கி சண்டிகேஸ்வரர், ஈசான்ய பகுதியில் நவக்கிரங்களும்,இடது பாகத்தில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் தெற்கு நோக்கியநிலையில் சிறு அளவாக அழகிய முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலில் முக்கிய கடவுளாக வழிபடக்கூடிய துர்க்கை அம்மன் தெற்கிலிருந்து வடக்காகஇருக்கிறது. கோபுரத்தின் முன் ஆலயத்தைக் காவல் காக்கும் இரண்டு துவார பாலகர்கள்கருங்கல்லினால் வடிக்கப்பட்டுள்ளன.
இவ் வாலயத்தில் முக்கிய, விஷேச பூசையாக இராகுகால துர்க்கா பூசையும்,வழிபாடுகளும்நடக்கிறது.அடுத்து சிவராத்தியின் போது நான்கு கால பூசைகள் சிறப்பாக கொண்டாப்படுகிறது.
-கிருஷ்ணன்,
சிங்கை.
பொத்தோங் பாசிர் என்றால் என்ன? மண்ணுமலை என்ற காரணப் பெயர் வரக்காரணம் என்ன? சிவன் ஆலயம் துர்காஆலயமாகப் பிரபலமடையக் காரணம்என்ன? இடம் மாற வேண்டிய நிலையில் சரியான இடம் கிடைக்காத நிலையில்பொத்தோங் பாசிரிலேயே கோயிலைக் கட்டவேண்டும் என நிலை எடுத்த நிர்வாகக்குழுவின் நிலைப்பாட்டிற்கு உதவிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் யார்?
பொத்தோங் பாசிர் என்பது மலாய்ச் சொல். பொத்தோங் என்றால் வெட்டுதல்,தோண்டுதல் எனப் பொருள்படும். பாசிர் என்பது மணல். மணல் தோண்டும் இடம்.இதனைத்தான் தமிழில் மண்ணுமலை என்றார்கள். சிங்கப்பூரில் மலைகள் ஒன்றும்இல்லை. எல்லாம் குன்றுகள்தான் அதுவும் சிறுகுன்றுகள்தான். இருப்பினும் மிகைப்படுத்தலில் நமக்கு நிகர் வேறு யாரும் இல்லை. ஆகவே சிறு குன்றுகள் கூடமலையாயின. இந்த மண்ணு மலையிலிருந்து மண்ணை வெட்டி எடுத்து சாலைகள்மற்றும் கட்டடங்கள் கட்டுவதற்கு சிங்கப்பூரின் இதர பகுதிகளுக்கு எடுத்துச்சென்றார்கள்.
மண்ணுமலைப் பகுதியில் நிறையத் தமிழர்களும் இந்தியர்களும் பிரிட்டிஷ் ஆட்சியின்போது குடியிருந்தனர். ஆச்சர்ட் ரோடில் இருந்த சிவன் கோயில் சிவன் சிலைஇங்குதான் முதலில் இருந்தது என்று கூறுவோரும் உண்டு. இந்த மண்ணுமலைப்பகுதியில் செட்டியார்கள் நிலங்களையும் வீடுகளையும் வாங்கினார்கள். அவர்களில் மிகவும்பிரபலமானவர் மெய்யப்ப செட்டியார். அவரின் நினைவாக இன்றும் இந்தக் கோயிலுக்குச் செல்லும் ஒரு பாதைக்குப் பெயர் மெய்யப்ப செட்டியார் ரோடுஎன்றே அழைக்கப்படுகிறது. என் தந்தையார் சிறுவயதில் 1930களில் தமிழகத்திலிருந்துசிங்கை வந்தபோது இங்குதான் முதலில் இருந்தார். அப்பாவு என்ற முனிசில் கவுன்சிலர் வீட்டாருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. அவரின் வழித்தோன்றல்கள் எனக்குநண்பர்கள்.
சிவன் கோயிலாக இக்கோயில் பிரபலமடைந்த வேளையில் மதுரையிலிருந்து கோயிலில் பணியாற்ற வந்த இலங்கை வம்சாவளி சிவாச்சாரியாரால் சிங்கையில் முதன் முதலில்இங்கு துர்க்கையம்மனுக்காக விளக்குப் பூசையைத் தொடங்கிவைத்தார். அது பெண்களிடையே மிகவும் பிரபலமானது, கோயிலுக்குத் தேவையான நிதியும் இந்த வழிபாட்டுமூலம் கிடைத்தது. அந்தச் சிவாச்சாரியார் தமிழ்நாட்டிற்குத் திரும்பித் சென்றுவிட்டாலும் அவர் தொடங்கி வைத்த பூசை இன்றும் இக்கோயிலில் நடைபெறுகிறது. அவரின் மகள்தான் செல்வி லதா- சிங்கை நாளிதழான தமிழ் முரசில் வேலை செய்கிறார்(அண்மையில் கூட அவரின் கவிதைகள் சில விகடனில் பிரசுரமானது).
கோயிலைப் புதிய வீடமைப்பு பேட்டையாக விளங்கும் இந்தப் பகுதியில்கட்டவேண்டும் என்று நிர்வாகத்தினர் நினைத்தபோது அவர்களுக்கு மிகவும் உதவியாகஇருந்து அரசாங்கத்திடமிருந்து நிலத்தை பெற பெரும் உதவியாக இருந்தவர் முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சித்திக் சானிப் எனும் மலாய்க்காரர்.
-பழனியப்பன் ஆறுமுகம் .
Sri Siva Durga Temple,
8 Potong Pasir Ave.
2Singapore. 358362
Tel.62841899 & 62838002
Fax. 62862096
No comments:
Post a Comment