கர்ப்பக்
கிரகத்தில்
கிழக்கு
அல்லது
வடக்கு
திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் தூவாரம்
அமைக்கப்பட்டு இருக்கும். இந்த தூவாரத்தின் வழியே
செல்லும் நீரிலும் பிராண சக்தி கலந்துவெளிப்படுகிறது.
அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம்வரும் நாம் எடுத்து கண்ணிலும், சிரசிலும் ஒற்றிக்கொள்கிறோம். அந்த சில நிமிடங்களில் நம் மீதுபிராண சக்தி பரவுகிறது.
இந்த பிராண சக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது.சிலையின் பக்கவாட்டில்தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம்செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறுகாலைகர்ப்பக்கிரத்தின் வாயிலும் வைக்ககூடாது. கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும்பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில்தான் கூறியுள்ளனர்.
தமிழ் நாட்டு பல கோயில்களில் சித்தர்கள் சமாதிஅடைந்துள்ளார்கள். சித்தர்கள் சமாதி அடைந்தகோயில்களில் இந்த இறைவுணர்வும், ஈர்ப்பு சக்தியும்அதிகமிருப்பதை நாம் உணரமுடியும். நம் மனதில்கோபம், ஆக்ரோஷம், குழப்பம், கவலை, ஆகியவை எழும் போது நம் உடலை சுற்றி உள்ள அலைகள்14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர். நாம் ஓய்வெடுக்கும்போது (ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும்.அந்த அலைகளை ஆல்பா அலைகள் என கூறுகின்றனர். அதே உடல் தியான நிலையில் இருக்கும் போதுஎட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். இதனை பீட்டாஅலைகள் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தவ நிலையில்உள்ள சித்தர்களின் உடலில் இருந்துவெளிப்பட்டு கொண்டே இருக்கும். மிகப் பிரசித்தமான கோயில்களில்சித்தர்கள் சமாதி அடைந்திருக்கும் மர்மம் இதுதான்.
பலி பீடம்....
பலி பீடம் என்பது இங்கு உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல.நம் மனதுள் நமக்கு தெரியாது ஒளிந்திருக்கும் காமம்,ஆசை, குரோதம், லோபம், மோகம், பேராசை,மத, மாச்சர்யம் எனும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுத்தாக உறுதி செய்துக்கொள்ளுமிடம்.
வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் நலன் ஒன்றும் வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழானஇயல்புகளெல்லாம் அந்த இடத்திலே பலி கொடுக்கவேண்டும். மனிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம்அங்கு பலியிட வேண்டும். மேலான எண்ணங்கள் மட்டுமே எஞ்சியிருக்கவேண்டும்.
இங்கு தலை, கையிரண்டு, இரு செவிகள், இரு முழங்கால், மார்பு, ஆகிய உறுப்புகள் பூமியில் படும்படிஅஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்கள் தலை, இரண்டு முழங்கால், மார்பு, ஆகிய உறுப்புகள்அஷ்டாங்க பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். அவ்வாறு கீழே வீழ்ந்து வணங்கும் போது வடக்குபக்கம் தலை வைத்து வணங்க வேண்டும்.
வலம் வருதல்.
மேலான மனப்பான்மை உடையவர்க்கு சுவாத்தின் போக்குவரவுஅல்லது பிராணயாமம் முறையாக நிகழ்கிறது.தங்கு தடையின்றி அமைதியாக வலம் போதுபிராணயாமமும் ஒழுங்காக நிகழ்ந்து விடுகிறது. சூக்ஷ்மமாகஉடலின்கண் நிகழும் நிகழ்ச்சி பிராணயாமம் வலம் வருதல்
சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டி வரவேற்கின்றோம்?
வாழ்க்கையில் தீயவைகளும், தொல்லைகளும் நீங்கி வசந்தமும், ஏற்றமும் வரவேண்டும் என்பதற்காக சுபகாரியங்கள் போதும், குடும்பம் வாழையடி வாழையாக வளரவேண்டும் வளம் பெற வேண்டும் என்பதற்காகதான்வாழை மரம் கட்டுகிறோம்.
அத்துடன் வேறு சிலசிறப்புகளும் வாழைக்குண்டு. வாழை மரம் சிறியதாகஇருந்தாலும், அதனிடமிருந்து வருகிற இலையோ நீண்டு இருப்பதுடன், அகலமாகவும் இருக்கும். வாழைதண்டு மிகமிக மென்மையானது. கடுங்குளிரையும் கொடும்வெயிலையும் வாழைத்தண்டால் தாங்க இயலாது.இதற்காக இயற்கை தண்டை சுற்றி மடல்களைப் பொதிந்து வைத்திருக்கிறது. உடலின் உட்பகுதியில்ஆயிரக்கணக்கில் பொடிப்பொடியாக கண்ணறைகளை வைத்திருக்கிறது. இந்த கண்ணறைகள் குளிரின்கடுமையையும், சூட்டின் கொடுமையையும் வடிக்கட்டி தண்டுக்குத் தேவையான அளவில் விடுகிறது.
அடுத்து வாழை தரும் வாழைப்பழம், வாழை இலைகள்பூஜையின் போது, பெருமளவில் பயன்படுத்துகிறோம்.
அப்படி என்ன வாழைப்பழத்திற்கு மகத்துவம்?வாழைப்பழம் எல்லா காலங்களிலும், எல்லா பருவங்களிலும் கிடைக்க கூடியது. வாழைப்பழத்தில் கொட்டை கிடையாது. பேய் வசிக்கும் காட்டில் பேயனாக நடமிடும் ஈசன் பேயன் வாழையிலும், முகுந்தனாகிய மகாவிஷ்ணு முகுந்தன் வாழையிலும் (இதுவே மொந்தன் வாழை
என்று மருவியுள்ளது) தாமரைப் பூவில்உதித்த பிரம்மன், பூவின் வாழையிலும் குடியிருப்பதாகஐதீகம்.
அதனால் வாழைப்பழம் இறை பூஜையில்உயர்வாக இடம் பெற்றுள்ளது. முக்கனியில் வாழை ஒன்று!
ஐந்து முக விளக்கும் ஐந்து முக தீபாராதனை.
உலகத்தில் பஞ்ச பூதங்கள் ஐந்து. அவை வானம், பூமி,காற்று, மழை, நெருப்பு. உடலில் பஞ்ச பூதங்களும்ஐந்து.அவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை.இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள்ஒளி பெற்று சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முகவிளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகிறது.
நாம் ஏன் திருநீறு சந்தனம் குங்குமம் நெற்றி குறியில் இட்டு கொள்கிறோம்?
நம் கபாலத்தில் உள்ள சிந்தனை நரம்புகளின் முடிச்சு இரு புருவங்களுக்கு இடையில் உள்ளது.மனிதன் அதிகமாக சிந்திக்கும் போது சிந்தனைநரம்புகள் சூடேறி நெற்றி வலி தலைபாரம், தலைசுற்றல்ஏற்படும். இந்நிலை நமக்கு ஏற்படும் . மன உளைச்சல் ஏற்பட்டு தன் நிலை மறக்க வேண்டிய சூழ்நிலைஉருவாகி பல விரும்பத் தாகத விளைவுகள் ஏற்படும். ஆகவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாகஇருக்க வேண்டும்.
சந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்கு குளிர்ச்சியூட்டும்தன்மை உண்டு. எனவே அந்த நரம்பு மண்டலம்குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக சந்தனம் பூசி, சந்தனம் காயாமல் இருக்க குங்குமம்இடுகிறோம். சந்தனம், திருநீறு சிவனுக்கும், குங்குமம்சக்திக்கும் அடையாளமாகும். இவற்றை தரித்தால்புத்துணரவும், புதுத் தெளிவும், புதியசிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள்தூண்டப்படுகின்றன.மனிதனின் உடற்கூறுக்கு உகந்தமுறைகளைதான் நாம் இறைவழிபாடுகள் மூலம் அடைகிறோம்.
1 comment:
நல்ல பதிவு. நன்றாக இருக்கிறது.
Post a Comment