Monday, July 23, 2007

முனீஸ்வரன் ஆலயம்


Sri Muneeswaran Temple (Queens Town)
முனீஸ்வரன் ஆலயம்

வேதக்காலங்களில் மக்கள் கல்வி அறிவு இல்லாதவர்களாக இருந்தனர். கல்வியின் சிறப்பைஅவர்கள் உணராமல் வாழ்ந்தனர். ஞானிகளும் அறிவையும் ஞானத்தையும் தேடாமல் சுகபோகவாழ்வைத் தேடிச் செல்லலாயினர். அறியாமை எங்கும் சூழ்ந்தது. சனகன், சந்தனன், சனத்னன்,சந்தனகுமாரன் என்ற நான்கு முனிவர்கள் சிவபெருமானிடம் வேண்ட அவர் தென்திசை நோக்கிக்குருவாக அமர்ந்து ஞானத்தைப் போதித்தார். அதன் பின்னரே வேதங்களும் இதிகாசங்களும்தோன்றின.தட்சிணாமூர்த்தியாக சிவபெருமானாகக் காட்சி அளித்தார்.
முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரராக இருந்து ஞானத்தைத் போதித்ததால் அவர் முனீஸ்வரர் என்றுஅழைக்கப்பட்டார். ஆனால் மக்கள் ஏனோ முனீஸ்வரரைக் காவல் தெய்வமாக வணங்குகிறார்கள்.
சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாகவும், முனீஸ்வரராகவும் இருந்து நம்முள் இருக்கும்அறியாமையை அகற்றுகிறார்

ஸ்ட்ரேயிட்ஸ் செட்டல்மெண்டின் (Straits Settlement)ஒரு பகுதியான சிங்கப்பூரில் 1928 – ல்தண்டவாளங்கள் அமைக்கும் பணி தொடங்கியது.முதல் இரயில்1932-ல் ஓடத் தொடங்கியது. தண்டவாளங்கள்,இரயில் பெட்டிகள், இவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு மலேசிய இரயில்வே ஊழியருடையதாகும். இவர்களில்பெரும்பாலோர் இந்தியர்கள். இவர்கள் யாவரும் குவீன்ஸ் டவுனில் (Queens Town) வசித்து வந்தார்கள்.
பண்டைக்காலத்தில் இருந்து தமிழர்கள் எங்கு குடியேறினாலும் ஆன்மீக தேவைகளைப் பூர்த்திசெய்யஏதேனும் ஒரு வடிவத்திலோ உருவத்திலோ கோயில் ஒன்றை நிறுவி வழிபடுவது வழக்கம். அதற்குஇங்கு வசித்த தமிழர்களும் விதிவிக்கல்ல.சூலம் ஒன்றையும், கல் ஒன்றையும் நிறுவி சிறு கூரையுடன்கூடிய குடில் ஒன்றினை அமைப்பார்கள். இந்த கூரை குடிலையே கோயிலாக எண்ணிவழிபடுவார்கள்.
ஆலய வரலாறு
ஆரம்ப காலங்களில் குவின்ஸ்வே(Queens Way) செல்ல ஒரு சிறிய சாலை மட்டுமேஇருந்தது. இரயில் தவிர வேறு வகையான போக்குவரவு மிகக் குறைவு. சிங்கப்பூர் அரசாங்கம்குவின்ஸ்வே (Queens Way) பகுதியை மேம்படுத்த வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் மூலம்தொடங்கியது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் குவீன்ஸ் கிரசண்டில் ஏழு ஓரறை வீடு கொண்ட அடுக்கு மாடிக்கட்டடங்களைக் கட்டி வந்தது. பின்னர் கடைகளும் அங்காடி நிலையம் ஒன்றும் சேர்ந்துஅப்பகுதியை மேலும் மக்கள் நடமாட்டமும் உயிரோட்டமுள்ள இடமாக செய்தது. அங்கேவசித்து வந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள், அதுவும் இந்துக்கள் என்பதால் ஒருகோயிலின் அருகில் வாழ விரும்பினர். ஆகவே, அவர்கள் ஒரு சூலத்தையும், கல்லையும்வைத்து முனீஸ்வரனாக வழிபட ஆரம்பித்தனர்.
தினமும் வேலைக்கு செல்லும் முன் அவர்கள் குடிசையான கோயிலில் பிரார்த்தனைசெய்து விட்டு புறப்பட்டனர். அவர்கள் சூலத்தையும் கல்லையும் முனியாண்டி என்றுஅழைத்துடன் முனியாண்டி அல்லது முனீஸ்வரன் தேவகனம் எனும் சிவபெருமானின்உடலில் இருந்து மாற்றப்பட்டதாக நம்பினர்.’’
1961 –ம் ஆண்டில் குவீ ன்ஸ்வே டவுனில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின்தொடக்கக் குடியேறிகளில் ஒருவரான திரு.எ ன்.வீ. மேனன் இந்த குடிலைமுறையான கோயிலாக எழுப்பவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படமுனைந்தார்.
முதலில் குடிலுக்கும் குவீன்ஸ்வே சாலைக்கும் இடையே இருந்த செடி,கொடிகளையும், ஐந்து அடி உயரம் வளர்ந்திருந்த கோரைப் புற்களைஅழித்து சுத்தம் செய்து ஒரு ஒற்றையடி பாதை அமைத்தனர்.1962-ல்குவீன்ஸ் டவுனில் வசித்த அன்பர்கள், பக்தர்களைக் கொண்டு ஒருஇடைக்கால நிர்வாகம் அமைத்து அரசாங்கத்தில் பதிவு செய்யமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. முனீஸ்வரன் கோயில் அதிகாரப்பூர்வமாக1967-ல் மார்ச் முதல் தேதி பதிவு செய்யப்பட்டது.
ஆலய கட்டுமானப் பணி.
கோவில் அமையவிருந்த நிலம் மலேயன் ரயில்வே நிறுவனத்திற்குத் சொந்தமானதாகஇருந்ததால் அவர்களின் அனுமதி கோரினர். கோயிலை எழுப்ப மலேய ன் ரயில்வேஅதிகாரிகளிடம் பிரதிநிதித்துவம்செய்யப்பட்டபின் கோயிலைக் கட்டிக்கொள்ளதற்கால உரிமம் வழங்கப்பட்டது. விரைவாகக் கட்டுமானப்பணியும் தொடங்கியது.டிசம்பர் 1969- க்குள் எளிய முறையில் கோயில் ஒன்று நிர்மானிக்கப்பட்டு முனீஸ்வரர்,விநாயகர், மாரியம்மன், முருகன் ஆகிய சிலைகள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டன.இடைக்காலத்தில் தற்காலிய பிரச்சனைகள் தோ ன்றினாலும் நிர்வாகக் குழுவினரும்தொண்டூழியர்களும் விரைவாக தீர்வுக் கண்டனர்.
முனீஸ்வரன் கோயில் முதல் கும்பாபிஷேகம் 18 தேதி, ஜனவரி, 1970– ல் நடந்தேறியது.புதிய ஆலய பூஜைகளை நடத்தும் பொறுப்பினை கதிகாய பண்டாரம் ஏற்றார்.
மீண்டும் ஒரு புதிய அத்தியாயம்
இருபது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது.குவி ன்ஸ்வேயில் இருந்த பழைய இடம் இரயில்வே காரியங்களுக்கு மட்டுமேஒதுக்கப்பட்டிருந்தது. அதனால்,அன்றைய மேலாண்மைக் குழு கட்டட சீரமைப்புபணிகளை மேற்கொள்ள இயலவில்லை. வேறொரு இடத்தில் புதிய கோயிலைக்கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என குழு தீர்மானித்தது. அந்த தீர்மானத்தின்காரணமாக, புதிய இடம் கோரி பல முறையீடுகள் செய்யப்பட்டன.
புரிந்துணர்வு மிக்க பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், இந்து அறக்கட்டளைவாரியமும் தகுந்த ஓர் இடத்தைப் பெற்று தந்தனர். ஆனால் அவ்விடம் 1993வரை அமைந்திடவில்லை.
மலேயன் இரயில்வே அதிகாரத்தின் கீழ் உள்ள நிலத்தில் அமைந்திருந்த எல்லாகுடிசைகளையும் அப்புறப்படுத்துவது, மறுசீரமைப்பு கொள்கை என வீடமைப்பு வளர்ச்சிகழகம் தெரிவித்தது. முனீஸ்வரர் கோயிலும் மலேயன் இரயில்வே நிலத்தில் அமைந்திருந்தகாரணத்தால், மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் முனீஸ்வரர் கோயில், மற்ற கோயிலுடன்இணைந்தால் மட்டுமே இடம் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.
மலேயன் இரயில்வே அதிகாரத்தின் கீழ் உள்ள நிலத்தில் அமைந்திருந்த எல்லா குடிசைகளையும் அப்புறப்-படுத்துவது, மறுசீரமைப்பு கொள்கை என வீடமைப்பு வளர்ச்சி கழகம் தெரிவித்தது. முனீஸ்வரர் கோயிலும்மலேயன் இரயில்வே நிலத்தில் அமைந்திருந்த காரணத்தால், மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் முனீஸ்வரர்கோயில், மற்ற கோயிலுடன் இணைந்தால் மட்டுமே இடம் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.
நான்கு கோயில்களுடன் சேர்ந்து அமைப்பதற்கு வீடமைப்பு வளர்ச்சி கழகம் மாற்று இடம் வழங்கியது.இணைய பரிந்துரைக்கப்பட்ட கோயில்:-1. சிலாட் சாலையிலுள்ள வேல் முருகன் கோயில்.2. ரைப்பல் ரேன்ஞ்சிலுள்ள (Rifle Range) மாரியம்மன் கோயில்.3. கான்பரா சாலையிலுள்ள புனித மரம் பாலசுப்பிரமணியர் கோயில்.4. புக்கிட் தீமா அவென்யூவிலுள்ள இராம பக்த அனுமான் கோயில்
ரைப்பல் ரேன்ஞ்சிலுள்ள (Rifle Range) மாரியம்ம ன் கோயிலைத் தவிர ஏனையகோயில்கள் இணைவதில் ஆர்வம் காட்டவில்லை.
புலோ புக்கம் தீவிலிருந்த விநாயகர் கோவில்,எண்டர்சன் சாலையிலிருந்த சித்தி விநாயகர் கோவில்,முனீஸ்வரன் கோயில் ஆகிய நான்கு கோயில்களும் ’’முனீஸ்வரன் கோயில்’’என்ற பெயரில் ஒரு குடை கீழ் இணைந்தன.
இறுதியில் 3, காமன்வெல்த் டிரைவில்(Commonwealth drive) 2500 சதுர மீட்டர்நிலத்தில் முனீஸ்வரன் கோயில் இயங்க வீடமைப்பு கழகம் அனுமதி அளித்தது.இந்நிலத்திற்காகக் கோயில் நிர்வாகம் வீடமைப்பு கழகத்திற்கு 550,000 வெள்ளிவழங்கியது. 20-ம் தேதி, நவம்பர், 1994 ஆண்டு அடிக்கல் நாட்டு விழா முனீஸ்வரர்ஆலய வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது.
இந்து சமூகத்தினரின் சமய தேவைகளை மேம்படுத்திப் பூர்த்தி செய்யவும், இந்துசமூகத்தினர் சமூக, கலாச்சார, கல்வி, பொழுதுபோக்கு, சமூக சேவை தேவைகளைஉணர்ந்து அவற்றை மேம்படுத்த, ஐந்து அடுக்கு கொண்ட இராஜகோபுரத்துடன்,பிரதான கோயில் வழிபாட்டு சன்னிதிகளுடன் பன்னோக்கு திருமண மண்டபம்,விசேஷ நடவடிக்கைகளுக்குத் தனி அறை எனச் சிறப்பான முறையில் ஆலயம்அமைந்துள்ளது.
முனீஸ்வரர் சன்னிதி தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் சிறப்பானது.மிக பெரியது என நம்பப்படுகிறது. அது இந்தியாவின் தலை சிறந்த கட்டடகலைஞர்கள், சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டது. இந்து சமயத்தின்நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளைப் பிரதிபலிக்கிறது இச்சன்னிதி.முனீஸ்வர பெருமானை வழிபடும் போது பக்தர்களின் பார்வையை தூண்கள்மறைக்காதிருப்பது தனிச்சிறப்பு. வேறெங்கிலும் உள்ள சன்னிதிகளில்அரிதாகக் காணக்கூடிய கட்டட அமைப்பின் சிறப்பை முனீஸ்வரர் சன்னதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்து சமயத்தின் கீழ் சைவ, வேதாந்த தந்தர கோட்பாடுகள்ஒன்றிணைக்கப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பாகும். அருள்மிகு முனீஸ்வரரின்அளவற்ற சக்தி, பரிவு, எழில், சாந்தம், உண்மை ஆகிய தன்மைகளைக்கொண்ட தெய்வங்களை ஒன்றிணைந்து அமையப்பெற்றிருக்கிறது.சிற்பமும் கைவண்ணமும் இணைந்து பக்தியுடனும் பெருமையுடன் வணங்கிநிற்கும் பக்தர்களுக்கு அமைதியையும் நளினத்தையும் பறைசாற்றுகின்றன.
சன்னிதிகள்மூலவராக முனீஸ்வரர், கர்ப்பக விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை அம்மன்,மாரியம்மன், கிருஷ்ண ர், ஐயப்பன் சுவாமி, காசி விசாலாட்சி, நவகிரகங்கள்என அருள் பாலிக்கிறார்கள்.
சமய விழாக்கள்.ஆண்டுதோறும் விசாக தினத்தில் கூட்டு பிராத்தினை,பஜனையும், முருகப்பெருமானுக்கும், தெய்வானை,வள்ளி ஆகியோருக்கும் நிகழ்ந்த தெய்வீகதிருமண விழா, சித்திரா பெளர்ணமி,கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர்சதுர்த்தி, கந்த சஷ்டி விழா, திருக்கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி,மாசி மகத்தி ன் முதல் நாள் சங்கு 108 பூஜை, நவராத்திரி விழாக்களுடன்முக்கிய பண்டிகை நாட்களில் பூஜைகள், சமய விழாக்கள் நடத்தப்படுகின்றன.
சமூக சேவை திட்டங்கள்ஆலயம் என்பது வழிபாட்டுக்கு உகந்த இடமாக மட்டும் இருந்தால் போதாது.அது இந்து சமூகத்தினரின் சமூக, கலாச்சார தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக்க இடமாகவும் விளங்கிட வேண்டும்.முனீஸ்வரர் ஆலயத்தில் பலதரப்பட்டசமூக சேவை திட்டங்கள் மேற்கொண்டு வருகிறது.இலவச சட்ட ஆலோசனைசேவை, எழுவர் கொண்ட காற்பந்தாட்டம், மெதுவோட்டம், இந்து சமயப் பாடதுணை வகுப்பு, சத்திய சாயிபாபா பஜனை ம ன்றம், தேவார வகுப்புகள் தமிழ்பாலர்பள்ளி, இயற்கை சிகிச்சை முறை, பரத நாட்டியம் வகுப்பு, யோகப் பயிற்சி,சிறையில் இருக்கும் கைதிகளுக்குச் சமய வழிப்பாட்டைக் கடைப்பிடிக்கவும்,பின்பற்றவும் பயிற்சியும், ஆலோசனை வழங்குதல் என பல் வேறு சமூக நடவடிக்கையில்ஈடுபட்டுள்ளது.
தினம் வேலைக்குச் செல்லுமுன் இங்கு வந்து வணங்கி செல்வார்கள்.இந்த கல்லும், சூலமும் பிற்காலத்தில் முனீஸ்வரருக்கு அழகிய கோயில்அமைந்திட வழி வகுக்கும் என்று அன்று யாரும் சிந்திக்கவோ, எதிர்பார்க்கவோஎண்ணியோ இருக்க மாட்டார்கள்.
நல்ல செயல்கள், சிந்தனைகள் என்றும் கனவாகி போனதில்லை.
நன்றி, வணக்கம்.
ஆலய முகவரி:-
Sri Muneeswaran Temple (Queens Town)
3, Commonweath DriveSingapore. 109670
Tel 64735037/ Fax. 64757967

- கிருஷ்ணன்,
சிங்கப்பூர்.

No comments: