Saturday, July 14, 2007

செண்பக விநாயகர் கோயில்


செண்பக விநாயகர்
கோயில்



பிடியதன் உருவுமை கொள்மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை-- திருஞான சம்பந்தர் --

"ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹிதந்நோ தந்தீ ப்ரஜோதயாது" -
இறைவன் அல்லது பரம்பொருள் ஒன்றே. சரம் அசரம் என்றஎல்லாப் பொருள்களிலும் தங்கியிருப்பவன் இறைவன்.

'' பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூண ஆனந்தமே'' ;அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது'' இறை.ஐந்தொழில் புரியும் சிவன், சிவக்கனல் முருகன், மோனஞான போத தட்ச்சணா மூர்த்தி, பராசக்திபரம்பொருளின் இஇச்சா,கிரியா, ஞான சக்தியின் கூட்டு. அவ்வாறே இறைவனின் திவ்விய வல்லமையின்வடிவம் என்று கூறப்படுவது விநாயகர்.

விநாயகரை முழு முதற் கடவுளாக வழிபடும் சமயம் காணபத்யம். ஆனால் இந்து மதம் முழுவதற்கும்பொதுவாய் எழுந்தருளியிருக்கும் தெய்வம் விநாயகர்.எந்த ஒரு நற்காரியத்தைத் தொடங்கும் முன்னும்விநாயகர் வணக்கத்துடன் தொடங்கும் போது காரியம் சித்தியடையும் என்பது நம்பிக்கை. அத்துடன்விநாயகர் வழிபாட்டில் விநாயகரை உருவத்தில் கொண்டு வருவதும் எளிது. மண்ணினால்,சாணத்தினால், அரிசி மாவினால், மஞ்சளினால் பிள்ளையாரை எளிதில் உருவாக்கிடலாம். வேறுசின்னம் அகப்படாத இடத்து அறுகம்புல் அவருக்கு அறிகுறியாக வந்து நிற்கும். இயற்கையின்முறைமைகளைக் காக்கச் சிவசக்தியின் அருட்பிரசாதமாக ஆனைமுகன் உருவெடுத்தான்என்பது ஐதீகம்.

ஆண், பெண் பேதத்திற்கு அப்பாற்பட்டவர். ஆகையால் மற்ற தெய்வங்களைப் போன்று அவருக்குச்சிக்தி, புத்தி என இரண்டு சக்திகளை அவரோடு இணைத்து சொல்வது உண்மையாய் அவர்மகிமையை விளக்குவது ஆகும்.. விநாயகரின் உருவமானது பல்வேறு தத்துவங்களை எமக்குப்புகட்டுகிறது. விநாயகர் 'ஓம்'கார மூர்த்தியானவர் என்பதை விளக்க ஆனைமுகத்தானாக அவர்உருவெடுத்துள்ளார். அண்டங்கள் யாவும் அவனிடத்து அடங்கியுள்ளன என்பதை விளக்க அவரதுபேழை வயிறும், தன்னிடத்து தங்கியிருக்கும் யாவையும் தனது சக்தியால் தாங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை வயிற்றைச் சுற்றியிருக்கும் சர்ப்பமும் உணர்த்துகிறது. ஆற்றலிலேமானுடரை விட மிக்கவர் என்பதைக் காட்ட தும்பிக்கையுட்பட்ட ஐந்து கைகளைக்கொண்டுள்ளார்.
மக்களை நல்வழியில் நடத்துதலை உணர்த்த அங்குசமும் துன்பத்திலிருந்துகாக்கப் பாசமும், சிந்தனாசக்தி வளர்ப்பது அவசியம் என்பதைக் காட்ட ஜபமாலையும்,கல்வியை உணர்த்த தந்தமும், அவரது கைகளில் இருக்கின்றன. மேலும் தும்பிக்கைஎப்பக்கம் வளைந்து உள்ளதோ அதன்படி வலம்புரி விநாயகன், இடம்புரி விநாயகன்என இயம்பப்படுகிறார்.

விநாயகருக்கு இன்னும் பல பெயர்கள் அடியார்களால் வழங்கப்படுகின்றன். மூஷிகவாகனன்[பெருச்சாளி வாகனன்] வித்யராஜன்.[கல்விக்கு அரசன்] ஓங்காரரூபன்[ ஓம் என்னும் மந்திர வடிவினன்], ஞானகணபதி [ஞானியர் கூட்டத்திற்கு தலைவன்]
விநாயகர் வழிபாடு யாவருக்கும் எளிதானதாகவும், விநாயகர் வணக்கத்துடன் தொடங்கும்எக்காரியமும் சித்திபெறும் என்பதாலும் இந்து சமய மக்களிடமும் ஆதிகாலந்தொட்டு நிலவிவருகிறது. விநாயக சதுர்த்தி, விநாயக சஷ்டி, போன்ற விரததினங்கள் விநாயகரை நினைந்துஅனுசரிக்கப்படுகின்றன.

ஆலய வரலாறு......

செண்பக விநாயகர் ஆலயம் 1800 -ஆம் ஆண்டு இறுதியில் தோற்றம் கண்டதாக வாய்மொழி வரலாறு.சிங்கப்பூர் கடற்கரையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது காத்தோங் எனும் இடம். இப்பகுதியிலிருந்தநீர் தேக்கதில் ஒரு விநாயகர் சிலை கண்டு எடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையைஅருகிலிருந்த செண்பக மரத்தடியின் கீழ் வைத்து வழிபட தொடங்கினார்கள். ‘
அவ்வாட்டாரத்தில் வாழ்ந்த இலங்கையிலிருந்து வந்த இலங்கை தமிழர்கள். செண்பக மரத்தடியின் கீழ்இருந்த காரணத்தால் இந்த விநாயகருக்கு ''செண்பக விநாயகர்'’ என்ற காரணப் பெயரும் அமைந்தது.

1875 -லிருந்து காத்தோங்கில் பகுதியில், இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் அதிகமாக இருந்தனர்அவர்களில் முன்னோடியாக இருந்தவர் தியாகராஜா எதிர்நாயகம் பிள்ளை எனும் பெரியார். தியாகராஜாஎதிர்நாயகம் பிள்ளையுடன் அப்பகுதியில் வாழ்ந்த இலங்கை தமிழர்களும் சேர்ந்து இந்த செண்பக விநாயகருக்குநாள்தோறும் பூஜைகள் செய்து வந்தார்கள். ஆரம்ப காலத்தில் வெட்ட வெளியில் அமர்ந்திருந்த செண்பகவிநாயகருக்கு மரத்தைச் சுற்றி ஒரு சின்னக் கூரை குடிசை அமைத்து அமைத்துள்ளார்கள்.
சிலோன் ரோடு.....

இப்போது அமைந்துள்ள ''சிலோன் ரோடு''ம் காரணப் பெயராகவே அமைந்தது. இலங்கையிலிருந்துவந்த இலங்கை தமிழர்கள் தங்கள் உற்றார், உறவினர், ஊர்க்காரர்கள் இப் பகுதியில் வாழ்ந்து வந்தகாரணத்தால் வந்தவர்களும் இங்கேயே தங்கிவிட்டார்கள். மற்றப் பகுதியிலிருந்த செண்பக விநாயகர்ஆலயம் வருபவர்களுக்கு அறிவிக்க ஓர் அறிவிப்புப் பலகையில் ''சிலோன் ரோடு'’ என்று குறித்துவைத்தார்கள். அதுவே பிற்காலத்தில், காலவோட்டத்தில் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

அக்காலத்தில் குடியேறிய இந்தியர்கள் பால் தரும் பசுவை இலக்குமியாக, தெய்வமாக, காமதேனுவாகவணங்கினார்கள். ஆகையால் சிங்கப்பூரின் ஆரம்பக் காலத்தில் நம்மவர்கள் நிறைய மாடுகளை வளர்த்து,பசு தரும் பாலை வியாபாரமும் செய்தார்கள். மாட்டுப் பண்ணை வைத்திருந்தவர்கள், செண்பக விநாயகர்வணங்கிவிட்டுத் தங்கள் காணிக்கையாகப் பால் தந்துள்ளார்கள்.

இலங்கை தமிழர் சங்கம் 1909-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1923- ஆம் ஆண்டில் இந்த ஆலயத்தின்சார்பில் இலங்கையில் இருந்து வந்த முன்னோடி ஒருவரால் இப்போதுள்ள நிலம் வாங்கப்பட்டது. பிறகுஇந்த ஆலயம் இலங்கை தமிழர் சங்க அமைப்பின் அறங்காவலர்கள் பொறுப்பின் கீழ் வந்தது. இலங்கைதமிழர் சங்க அமைப்பின் தலைவராக இருந்த Dr ஹாண்டி. (Dr.J.M.Handy) என்பவரின் நன்கொடையால்11 ஹாண்டு சாலையில் இலங்கை தமிழர் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டது.
பின்னர் 1977- ஆம் இந்த நிலம் மறுசீரைமப்பு காரணத்தால் அரசாங்கம் கையகப்படுத்தியதால்,இப்போதிருக்கும் 'பாலிஸ்டர் சாலைக்கு’ இலங்கை தமிழர் சங்கம் கொண்டு வரப்பட்டது.

சாதாரணக் கூரையுடன் வேயப்பட்ட ஆலயமாக இருந்த செண்பக விநாயகர் திரு.சோமநாதர் முத்துக் குமாருபிள்ளை என்பவரின் தலைமையில் செங்கல், சிமெண்ட கட்டடமாக அமைப்பட்டது. இதன் முதலாவதுகும்பாபிஷேக குட முழுக்கு விழா 1930- ஆம் ஆண்டு சனவரியில் 3-ஆம் நாள் நடைபெற்றது.

1939 - ஆம் ஆண்டில் இந்தக கட்டிடத்தில் நூல் நிலையம், பணியாளர்களுக்கு தங்கும் வசதி ஆகியவைசெய்யப்பட்டன. இந்து சமுதாயத்தினருக்கான சமயக் கல்வியின் தேவைகளைக் கவனத்தில் கொண்டு 1937– இல் சமயக் கல்வி வகுப்புக்கள் தொடங்கப்பட்டன. 1940– இல் செண்பக விநாயகர் ஆலயத் தமிழ்ப் பள்ளிஎன்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு சமய நிகழ்ச்சிகள், வகுப்புகள் நடைபெற்றன.

இரண்டாம் உலகப்போரில் 1942 சனவரி 22- ஆம் நாள். ஜப்பானியரின் குண்டு வீச்சால் ஆலயமும் அதன்சொத்துக்களும் சேதமடைந்த போதிலும், மூலஸ்தான விக்கிரத்திற்குச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
1955 ஜூலை 7-ஆம் நாள் ஆலயத்தின் இரண்டாவது கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.அதே ஆண்டில், சண்டேஸ்வரர் சந்நிதி அமைக்கப்பட்டது. 1961 – இல் ஆலயத்தின் இரு மருங்கிலும் பெரியமண்டபம் ஒன்றும், மடைப்பள்ளி, இரண்டு கழிப்பறைகள், இரண்டு வகுப்பறைகள் ஆகியவையும் கட்டப்பட்டன.

1960 இன் பிற்பகுதியிலிருந்து 1980 -ம் ஆண்டு வரை, ஆலயத்தின் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் தொடந்துதொடர்ந்தன.1970 சனவரியில் ஆலயத்தில் 60 அடி உயர் இராஜகோபுரம் கட்டப்பட்டு மூன்றாவது கும்பாபிஷேகம்நடத்தபட்டது.1983 ஆம் ஆண்டு புதிதாக ஒரு முத்து மணவரை மண்டபம் அமைத்து 1983 - ஆம் ஆண்டு 11நாள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மூன்று மாடியுடன் பல் நோக்கு மண்டபம், திருமணம் மண்டபம், புதிய ஏழு வகுப்பறைகள், நூலகம் எனபுதிப்பிக்கப்பட்டு 1989 ஆம் ஆண்டு, நவமபர், 8 -ஆம் நாள் திறப்பு விழா கண்டது.பல்வேறு இனமக்களின்நன்கொடைகளின் மூலம் 72 அடி உயரமும் 5 நிலைக்கொண்ட கோபுரம் கட்டப்பட்டது.

மூலவராக விநாயகர் வீற்றிருக்கிறார். வலது பக்கம் அருவுருத் திருமேனியான சிவலிங்கத்தையும் ,இடது பக்கம் மனேன்மணி அம்மையும் இருக்கிறார்கள். ஆலய சுற்றி வட்டத்தில் வள்ளிதெய்வானையுடன் முருகன் தனி மண்டப ஆலயத்தில் இருக்கிறார்கள். திருச்சபை மண்டபத்தில்நடராஜரும், சிவகாமி அம்மையும் வீற்றிருக்கிறார்கள். பைரவர், பஞ்ச முக விநாயகர் உடன்உறைகிறார்கள்.

கோபுரத்தில் சுதையிலான விஷ்ணு, விநாயகர், முருகன், சிவன், அம்பாள், பிரம்மா என 159 சிலைகள்இராஜகோபுரம் இடம் பெற்றுள்ளன. ஐந்தாவது மகா கும்பாபிஷேகம் 2003 ஆண்டு பிப்ரவரி 7-ஆம்நாள் நடைபெற்றது.
செண்பக விநாயகர் ஆலயமாகையால் வாயிலில் செண்பக மரம் இருக்கிறது. நம்மையும் செண்பகமணத்துடன் விநாயகர் வரவேற்கிறார். அமைதியான சூழ்நிலையில் அமைந்திருக்கும் ஆலயம் மனதுக்குஇதமளிக்கிறது. வாகனப் போக்குவரவு சத்தம் காதை துளைக்காத சூழ்நிலை அமைதி. தூய்மையானஆலய பாரமரிப்பு கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம். மனித வாழ்க்கை அர்த்தமற்றதாக வாழ்வதற்கல்ல.இறைவனை, ஆன்மீகத்தை அறிந்து தியானித்து வாழ்க்கையை செம்மைப் படுத்தவே மனித பிறப்பு.

இந்து சமுதாயத்தின் மிக முக்கியச் சமய அமைப்பாக இந்த ஆலயம் இன்று திகழ்வதோடு,சிங்கப்பூரில் உள்ள பல்வேறு சமய, இனத்தவரின் ஆதரவையும் மிகச் சிறப்பான முறையில் பெற்றிருக்கிறது.சிறப்பு பூஜைகள், பொங்கல், சங்கடஹர சதுர்த்தி,பிரதோஷம், கார்த்திகை,சித்ரா பெளர்ணமி,திருவிளக்கு பூஜை, மஹோற்சவம், வைரவர் பூஜை, ஆடி வெள்ளி, நவராத்திரி, கந்த சஷ்டி,விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களும், பூஜைகளும் நடைபெறுகிறது.

No comments: