ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹிதந்நோ
ருத்ர பிர்ஜோதயாது
ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்கசோதியே துலங்கும் எண்தோள் சுடர்மழு படையி னானேஆதியே அமரர்கோவே அணியணா மலையு ளானேநீதியால் நின்னை யல்லால் நினையுமா நினைவி லேனே அப்பர்பெருமான் –
( ஓதற்குரிய மந்திரத்தால் ஓதி, மலர்கள் தூவி, உமையவள் பங்கனாய் மிக்கசோதியாய் விளங்குபவனே! ஒளி பொருந்திய கூர் மழுப்படையைத் தாங்கியவனே !ஆதியே ! அமரர்க்கரசே ! அணி அண்ணாமலை
யுள்ளானே !உமக்கும் ஆன்மாவுக்கும் உள்ள நெருங்கிய உறவான யானும் உன் நினைவிலேயேஇருப்பதன்றி வேறேதும் நினைவற்றவனாயுள்ளேன் ! )
மெய்ப்பொருள் ஒன்று. அதனைப் பல்வேறு பெயர் கொண்டுஅழைக்கிறார்கள்.இம் மெய்பொருளைப் பல்வேறு மதத்தவர் பல்வேறுபெயர் கொண்டு வணங்குகிறார்கள்.விஞ்ஞானத்தினால் கூட அணுக முடியாதஇப்பெரும் சக்தியைப் பரப்பிரம்மம் என்கிறது வேதாந்தம்.பல்வேறு கிளை நதிகள் வெவ்வேறு திசையில் உற்பத்தியாயினும்இறுதியில் கடலில் சங்கமாவது போல்
இம்மதங்கள் யாவும் ஆதியும்அந்தமுமற்ற ஒரு மெய்ப்
பொருளையே சார்ந்து நிற்கின்றன. சிவம் அடிமுடி காணாத
பொருள்.
''தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...'' எல்லா நாட்டவராலும் கடவுள் என போற்றப்படுபவரைச்
சிவன் எனப் போற்றித் துதிக்கிறது.
இந்துமதத்தின் முக்கிய பிரிவுசைவசமயம். குணமும் குறியும்
கடந்த இறைவன் நமக்கு அருள் செய்வதற்கும்,நற்
சிந்தனைகளை வழங்கவும் பல அருள் மூர்த்தங்கள்
தாங்கி அருள்பாலித்து வருகிறார். ஆலயங்களில் சிவ
வழிபாட்டிற்குரிய சின்னமாய் கருதப்படும் அருவுருவ
வடிவில் சிவனேஎழுந்தருளியுள்ளார் ஆவுடையார் என்னும்
கீழ்ப்பகுதி சக்தியின்சின்னம். அதிலுள்ள லிங்கம் சிவத்தின்
சின்னம். சிவசக்தியின்ஐக்கியத்தால் சராசரங்கள் யாவும் தோன்றியுள்ளன என்பதை இச்சின்னம் குறிக்கிறது.
காமம் அகன்று சிவஞானத்தோடு கூடிய பக்தி உண்டாகஞானக்கண்ணோடு கூடிய முக்கண்ணராக மாந்தர் ஆகவேண்டும்என்னும் கருத்தை முக்கண்ணன் வடிவத்தி
லிருந்து சிவபெருமான்விளக்குகிறார்.ஆணவம், கன்மம், மாயை
என்னும் இருளிலிருந்து,உறக்கத்திலிருந்து விடுபட்டு, துயிலெந்து
இந்த ஆன்மா இறை அருளில்தோய்விப்பதே சிவம்.உருத்திரன்
என்னும் உக்கிர சொரூபம்மூலம் பயத்தையும், அஞ்ஞான
இருளையும் மரணத்தைப் பற்றிய அச்சத்தையும்போக்குகிறார்.
கேடுகளை ஏற்றுக்கொண்டு நலன்களைஉலக மக்களுக்கு
அளிப்பதை நீலகண்டன் வடிவலிருந்து உணர்த்துகிறார்.
இறைவனுடைய நடராஜ வடிவமானது இறைவனின் ஐந்
தொழில்களையும் மக்களுக்கு உணர்த்துகிறது. உடுக்கை ஏந்தியகையானது படைத்தல் தொழிலையும், அபயகரமானது காத்தல்தொழிலையும், அக்கினி ஏந்திய கை அழித்தலையும்,
முயலகன் மீதுஊன்றிய திருப்பாதம் மறைத்தலையும், தூக்கிய திருப்பாதம்அருள் அலையை குறிக்கிறது. அடிமுடி தேடிய
கதையானது இறைவன் ஆதியும்அந்தமும் இல்லாத
அருட்பெருஞ் சோதி என்பதையும்மட்டுமல்லாது பரம்
பொருள் உருவம் உடையதாகவும் உருவத்தைக் கடந்த
நிலையிலும் உள்ளதென்பதையும் விளக்குகிறது.
பிரதோஷம்,மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரைசிவனுக்குரிய
முக்கிய விரத நாட்களாகும். பிரதோஷம் பதினைந்துநாட்களுக்கு
ஒரு முறையும், சிவராத்திரி மாசி மாதத்திலும்,திருவாதி
மார்கழி மாதத்திலும் வருபவை. சிவ வழிபாடானதுஆதி
காலந்தொட்டே நிகழ்ந்து வருவதை,சிந்து வெளி நாகரீகஅகழ்வாராய்ச்சிகள், மகாபாரதம்,இராமாயணம் போன்ற புராணகால இதிகாசங்கள் சங்கம் மருவிய கால நூல்களான சிலப்பதிகாரம்,மணிமேகலை போன்றவைகள் சான்று பகர்கின்றன.ஆகவே அழகில் சோதியன் அம்பலத்தாடு
வானை வாழ்த்தி வணங்கி பிறவிப் பயனை அடைவோமாக.
சிவலிங்க வழிபாட்டிற்கென்றே முக்கியத்துவமளித்து1850-ல் தொடங்கப்பட்டது இந்த சிவலாயம். நகர சீரமைப்பின்
காரணமாக இவ்வாலயமும் மூன்று முறை இடம்
பெயர்ந்துள்ளது. சிவன்கோயிலின் வரலாறும், வளர்ச்சியும் சிங்கப்பூரின்வரலாற்றோடும், வளர்ச்சியோடும் பின்னிப் பிணைந்தவையாகும். ஆகவேசிவன் கோயிலின் வரலாற்றைப் புரிந்துகொள்ளசிங்கப்பூரின் வரலாற்றுப் பின்னணியையும் தென்கிழக்காசியாவில்,குறிப்பாகச் சிங்கப்பூரில், சைவத்தின் வளர்ச்சியையும்சுருக்கமாகத் தெரிந்து கொள்வது அவசியம்.
சிவன் கோயில் தோற்றம்......!
இந்திய மாநிலங்களான தமிழ் நாடு, பீகார், உத்திரப்பிர
தேசங்களிலிருந்து இந்தியர்கள் சிங்கப்பூர் வரதொடக்கினார்கள்.
பீகார், உத்திரப் பிரதேசம் ஆகியஇடங்களிலிருந்து வந்த
பால்காரர்கள் சைவப் பற்று மிக்கவர்கள்.இவர்கள் மண்மலை
(தற்போது பொத்தோங் பாசிர்] என்று அழைக்கப்பட்ட இடத்தில்
உள்ள மெய்யப்பச் செட்டியார்எஸ்டேட்டில் குடியேறினர்.
தற்போது சிவன் கோயிலில் உள்ள லிங்கத்தை இவர்களே காசியிலிருந்து கொண்டு வந்துஅங்கு முதன்முதலில் நிறு
வினர் என்று சிலர் நம்புகிறார்கள்.இரண்டாம் உலகப்
போருக்கு பின்னர் மூன்று ஆண்டுகள்இக்கோயிலில்
குடியிருந்த ஒலிப்பரப்பாளரும், நீதிமன்ற மொழிபெயர்ப்
பாளருமான திரு.டி.எஸ். நாராயண ஐயர்இவ்வாறு
நம்புகிறவர்களில் ஒருவர். சிவன் கோயில் மண்மலை
எனும் பொத்தோங் பாசிரில் முதன்முறையாகநிறுவப்பட்ட
இந்த லிங்கம் டோபிகாட்டின் கீழ்கோடிக்கும்,பிறகு இப்போது
உள்ள மெக்டோனால்ட் ஹவுஸ்எனும் கட்டடத்திற்கு அருகில்
உள்ள இடத்திற்கும்,பிறகு எம்.ஆர்.டி எனும் விரைவு இரயில் நிலையம்அமைந்திருக்கும் இடத்திற்கும் மாற்றம் கண்டு,
இறுதியாக தற்போது அமைந்திருக்கும் கேலாங் வீடமைப்பு
பேட்டைக்கு மாறியது.
லிங்கத்தைக் கொண்டு வந்த அதே கப்பலில் பயணம் செய்த பால்காரர்களும் சிப்பாய்களும் தங்கள்நீண்டபயணத்தின் போது
அதை ஒவ்வொரு நாளும் மெருகேற்றியதாகவும் அதனால்தான்
லிங்கம் பளிங்குபோல் பளபளப்பாக உள்ளது என்றும் சிலர் கூறியுள்ளனர். திரு.நாராயண அய்யரும் இதைக் கேள்விப்பட்டுஇருக்கிறார். சிவபெருமானின் லிங்க
வடிவம் பரமேஸ்வர மன்னர் காலத்திலிருந்தே
சிங்கப்பூரில் இருந்துவந்திருப்பதாகத் தமது மூதாதையர்
கூறக் கேள்வியுற்று இருக்கிறார்கள். ரா·பிள்ஸ் வருவதற்கு முன்னரேலிங்க வழிபாடு சிங்கப்பூரில் இருந்து இருக்கிறது.
இதற்குச் சான்றாக பழைய ஆர்ச்சர்ட்ரோடு வரைப்படத்தில் சிவன் கோயில் குறிக்கப்பட்டுகிறது.
·பீரி பிரஸ் [Free Press] எனும் சிங்கப்பூர்செய்தி தாளில்
1960-ம் ஆண்டு பிரதி ஒன்றும் இந்தக்கோயில் லிங்கம் சிதம்பரத்திலிருந்து ஒரு சமய பெரியாரால் கொண்டு
வரப்பட்டது எனவும் தெரிவிக்கிறது.
இந்த கோயில் லிங்கத்தின் மூலம் எதுவாக இருப்பினும்
ஆர்ச்சர்ட் ரோடு ஆலயத்தில் 1850 க்கு முன்னரேவழிபட்டு
வரப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.1850 -களின்
தொடக்கத்தில் ஆச்சாட் ரோடுகோயில் சீரமைப்பு செய்து
மறுபடியும் கட்டப்பட்டது என்று தமது நூலில் டர்ன்புல் கூறுகிறார்.அந்நூலாசிரியர்கூறுவதாவது 1830 ஆர்ச்சர்ட்
ரோட்டிலுள்ள சிவன் கோயில் உறுதியான கட்டிட
அமைப்புடன் 1850 களின்தொடக்கத்தில் மீண்டும் கட்டி
முடிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள பழைய உறுதியன்ற தற்காலிக வழிபாட்டு
இடங்கள் உறுதியான கட்டடங்களாக உருவாக்கப்பட்டன.
(இக்காலக்கட்டத்தில் மற்ற சமயங்களின் வழிபாட்டுத்
தலங்களும் தோன்றியுள்ளன.ஆர்மோனியன் தேவாலயம்
1835 லும் செயிண்ட் ஆன்ட்ரூஸ் தேவாலயம் 1836 லும் கட்டப்பட்டன.தெலுக்காயர் உள்ள தியான் ஹொக் கியோங்
எனும் சீனக்கோயில் 1842-ல் முழுமையடைந்தது.முதல்
பள்ளிவாசல் கம்போங் கிலாமில் 1842-ஆம் ஆண்டும்,யூத
இனத்தவரின் முதல் வழிபாட்டுஇடம் 1845 லும் கட்டப்பட்டன.)
சிவன் கோயில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மற்ற
சமூகத்தினர் கட்டியசிவன் கோயில்களுக்குத் தனிப்பட்ட முறையில்தாராளமாக நன்கொடைகள் வழங்கியுள்ளனர்.
அப்படிப்பட்டவர்களில்இக்கட்டுரையில் பின்னர் குறிப்பிடப்
படும் நாகப்பசெட்டியாரும் ஒருவர்.சமூகம் என்ற வகையில்
தங்களின் சமய குருமார் கூறிய மற்றெரு ஆலோசனை
களையும்செட்டியார்கள் பின்பற்றினர். அதாவது சிவன்
மட்டும் தனியாக உள்ள கோயில்களில் அம்மனையும்
இடம்பெற செய்யவேண்டும் என்பதே அது.திருவையாறு
போன்ற திருத்தலங்களில் அவர்கள் அந்த ஆலோசனை
யையே பின்பற்றியுள்ளனர்.சிங்கப்பூர் சிவன் கோயிலில்
அம்மன் இல்லாததைக் கண்ட அவர்கள் முகலாயப்
படையெடுப்புக்குப் பிறகு காசியில்தாங்கள் நிறுவிய விசாலாட்சி அம்மனைப் போல இங்கும் விசாலாட்சிஅம்மனை நிறுவினர்.
இக்கோயிலில் உள்ளவிசாலாட்சி அம்மனுக்கும் செட்டியார் சமூகத்திற்கும் உள்ள பிணைப்புசிங்கப்பூர் செட்டியார் கோயிலில் அறக்கட்டளையின்குறிப்பேடுகளில் பிரதிப்பலிக்கப்பட்டு உள்ளது.
இக்கோயிலின் அம்மன் சந்நிதானத்தைச் சீர்செய்தல்,புதுப்பித்தல் போன்றவற்றிக்கும் ஏற்படும் செலவைசெட்டியார் கோயில் அறக்கட்டளை அவ்வப்போது ஏற்று வந்துள்ளது.1964-ம் ஆண்டில் அம்மன் சந்நிதானத்தைப்புதிதாகக் கட்டியபோது அதற்கான
செலவினை இந்து அறக்கட்டளை பொறுப்பேற்றுப் புதிய
கேலாங் கோயில்கட்டுவதற்கு நன்கொடை கொடுத்ததோடு
அம்மன் கருவறை விமானக் கலசத்திற்கு தங்கமுலாம் பூசும் செலவிற்கும்நன்கொடை கொடுத்துள்ளது.
விசாலாட்சி அம்மன் திருமேனி எப்போது நிறுவப்பட்டது
என்பதற்குச் சான்று எதுவும்தற்சமயம் கிடைக்கவில்லை.
திரு.நாராயண அய்யரின் நினைவிற்கு எட்டுவதெல்லாம்
தான் முதன் முதலில் 1936-ல்கோயிலுக்குச் சென்றபோது
அங்கு விசாலாட்சி அம்மன் சந்நிதி இருந்தது என்பது மட்டுமே.
கோயில் மறுசீரமைப்பு......!
கோயில் வளர்ச்சியின் அடுத்த கட்டிடம் 1898-ஆம் ஆண்டில்
நகராட்சி துறை பொறியிலாளர் எஸ் டாம் லின் சன்என்பார்
சமர்ப்பித்த ஆர்ச்சர்ட் ரோடு சிவன் கோயில் மறுசீரமைப்பு
எனும் திட்டத்துடன் தொடங்கியது.கோயிலின்மறுசீரமைப்பு
பணி பூர்த்தியடைவதற்குப் பல ஆண்டுகள் பிடித்தது.
திரு.நாகப்ப செட்டியார் என்பவரும் அவரின்துணைவியாரும்
தங்கள் சொந்த பணம் கொண்டும் உள் நாட்டு இந்துகளின்
நன்கொடை கொண்டும்கோயிலைக் கட்டினர்.
1961-.ஆம் ஆண்டில்தான் கோயிலின் மறுசீரமைப்பு பணி
தொடங்கியது. கட்டடத்தில் உள்ள சாந்துக்கலவையைத்
தொழிலார்கள் உளியால் செதுக்கி அகற்றும் பணியில்
ஈடுப்பட்ட வேளையில், மே 13 தேதி ஸ்ட்ரெயிட்ஸ்டைம்ஸ்
ஆங்கிலப் பத்திரிக்கை நிருபர் ஒருவர் கோயிலுக்குச் சென்றார்.
நந்தி சிலைக்குப் பின்னால் உளியால்செதுக்கப்பட்ட இடத்தில்
தமிழ் எழுத்துக்கள் குறிக்கப்பட்டு இருப்பதைக் கண்டார். கல் வெட்டுக்களில் இருந்தவாசகத்தை அப்போது அங்கு இருந்த
கோயில் அர்ச்சகர், ‘’நாகப்ப செட்டி, தேனாச்சி 1821-ல் சனவரி 23இக்கோயில் திருப்பணி செய்திருக்கிறனர்’’ என்று மொழி பெயர்த்துகூறியிருக்கிறார்.
கோயில் 1821-ல் முதன்முதலில் கட்டப்பட்டதாகவும் ஆகவே சிங்கப்பூரிலுள்ள இந்து வழிப்பாடு இடங்களில் அதுவே
பழமையானது எனவும்மறுநாள் பத்திரிக்கையில் செய்தி ஒன்று பிரசுரமானது. அதேபத்திரிக்கையில் அபு பின் ஆதம் எனும் புனைப்பெயரில்வரலாற்று கட்டுரைகளை எழுதி வந்த மற்றொரு நிருபரின் ஆர்வத்தை இது தூண்டியது. அவர் சில நாட்களுக்குப்
பிறகு கோவிலுக்குச் என்று பார்த்த போது நந்தி இருந்த செங்கல் மேடை முழுமையாக இடிக்கப்பட்டு தமிழ் எழுத்துக்கொண்ட
கல்வெட்டு கீழே இருக்கக் கண்டார்.அப்போது முன்பு
மறைந்திருந்த முதல் வரி உட்பட அதிலிருந்தவாசகம் முழுதும் தெரிந்தது.
’1899 அல்லது சாலிய வாகன வருடம்1821 சனவரி 23 ‘’என்று அது தொடங்கியது.அங்கிருந்த அர்ச்சகர் அதில் குறிப்பிட்ட 1899-ஆம் ஆண்டைக்குறிப்பிடுவதாக தெரிவித்தார்.அவர் கூறியது சரியே.
ஆங்கில ஆண்டு கணக்கிற்கும் தமிழ் ஆண்டு கணக்கிற்கும் 78
ஆண்டு இடைவெளி உண்டு.
முதல் திருகுட நன்னீராட்டுக்குப் பின், மறுசீர்அமைக்கப்பட்ட
கோயிலின் திருக்குட நன்னீராட்டு விழா1905 -ஆம் ஆண்டு
பிப்பரவரி 9 வியாழக்கிழமை நடைபெற்றதுள்ளது.இத்தகவல்
ஒரு வெள்ளி தகட்டில் எழுதப்பட்டுலிங்கத்தின் கீழ் வைக்கப்
பட்டு இருந்தது.1964-ஆண்டில் நடைபெற்றநன்னீராட்டு விழாவின்
போது பீடத்திலிருந்துலிங்கத்தை அகற்றியபோது தகட்டிலுள்ள வார்த்தைகள் படிக்கும் வகையில் தெளிவாக இருந்தன. இந்துஅறக்கட்டளை வாரியத்தின் ஆணையாளர்களின் ஒருவரும்,வாரியத்தின் நிர்வாகத்திலுள்ள நான்கு கோயில்களின்தலைவருமான திரு. வி,பக்கிரிசாமி
பிள்ளை அந்த செப்புத் தகட்டில்இருந்ததை எழுதி வாரியத்தின் கோப்பில்பாதுகாத்து வைத்துள்ளார்.
இரண்டாம் போரின் போது (1940 –1942) சிலர்கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர்.கோயிலைச் சுற்றி விழுந்தகுண்டுகள் கோவிலையும்,சிலைகளைச் சேதப்படுத்தின. சேதமடைந்த
சிலைகளின் புகைப்படங்கள் கோப்பிலிருந்ததால் அப்படங்
களைக் கொண்டு உள்ளாட்டு சீனக் கொத்தனார் ஒருவர்
புதிய சிலைகளை உருவாக்கி கொடுத்தார்.கோவிலை
புதுப்பிக்க திரு,பக்கரிசாமி பிள்ளையும், திரு.பி.கோவிந்தசாமி செட்டியாரும் நிதி திரட்டினர்.
1943 -ஆம் ஆண்டு ஜூலை 9-ந் தேதி ஒரு திருகுட நன்னீராட்டு
விழா நடத்தப்பட்டுள்ளது.
1943-1983 இடைப்பட்ட காலம் இடர் நிறைந்த காலமாக அமைந்தது.சன்னிதானங்கள் பாதிப்புஅடைந்து இருந்தது.
சிங்கப்பூர் துரித வளர்ச்சியின் காரணமாக,ஆர்ச்சர்ட் சாலை விரிவுப்படுத்த வேண்டும்எனும் காரணத்தால் 1954-ல் நகராட்சி ஆணையாளர்கள் கோயில் சாலையில் இருந்து 14 அடிதள்ளிஅமையவேண்டும் எனக் கேட்டுகொண்டனர்.
நீண்டகாலப் பேச்சுவார்த்தைக்குப் பின் ஒரு சமரசம் ஏற்பட்டது.கோயிலின் முன் பகுதியில் உள்ள 490 சதுர
மீட்டர் நிலத்தை விட்டுக் கொடுக்கப்பட்டதுடன் அதே
இடத்தில் கோயிலை மீண்டும் கட்டவும் அனுமதியளித்தது.
இழப்பீடாக ஐம்பதாயிரம் வெள்ளி அரசாங்கம்கொடுத்தது.
உள்ளூர்ச் சீனக் கட்டுமான குத்தகையாளர்கள் மூலம்
கட்டுமானப் பணிகள் ஏப்ரல் 1962-ஆண்டு முடித்தனர்.
மாரியப்ப ஆசாரி என்பவரும் அவரின் குழுவினரும் சிற்ப வேலைப்பாடுகளைச் செய்தனர்.
1983-ல் எம் ஆர் டி எனும் விரைவு இரயில் நிலையத்திற்குக்
கோயில் அமைந்திருந்த நிலத்தைப்பற்றுமானம் செய்ய
அரசாங்கம் முடிவு செய்தது. இழப்பீடாக 406,440 வெள்ளி கொடுக்கப்பட்டது. கோயிலைமீண்டும் கட்டுவதற்குப்
பொருத்தமான இடத்தைத் தேடிய வாரியம் கேலாங்கி
லுள்ள ஒரு இடத்தை 1983சனவரி 10-ல் தெரிவு செய்தது.
இந்து அறக்கட்டளை வாரியமும் சிவன் கோயில் நிர்வாகக்
குழுவினரும் புதிய கோயிலின் வடிவமைப்பைத்தென் இந்திய,
வட இந்தியா பாணியிலான கோயில் வடிவிலான கட்டட
அமைப்புடன், புதிய எண் கோண்வடிவில் உருவாகியது.
3000 ச.மீட்டரில் புதுக்கோயில் தோற்றத்திலும்,வடிவிலும்,
வசதிகளிலும் புதுமைமிக்கஆலயமாக அமைந்துள்ளது.
ஆலயத்தின் முக்கிய விழா நிகழ்ச்சியாக மகா சிவராத்திரி,வசந்த நவராத்திரி, குரு பெயர்ச்சி மற்றும், சமயவிழாக் கால நிகழ்வும் நடைபெறுவருகின்றன.
(சிங்கப்பூரில் அமைந்திருக்கும் ஆலயங்களில் சிவன் ஆலயம்ஒன்றாகும். 1830-ம் ஆண்டு முதலே அதன் வரலாறு தொடக்கம்இருந்து வந்துள்ளது. இது நம்மவர்கள் சைவத்தின் மீதுகொண்டுள்ள ஆன்மீக உணர்வை புலப்படுத்துகிறது.
எத்தகைய துன்பம்,இடர்கள் வந்தபோதும் கொண்ட கொள்கையில் தளர்வில்லாது இருந்தவர்கள் தமிழர்கள்.சிவன் ஆலயத்தின் வரலாறு, ஆணி வேர், சல்லி வேர்என்று ஆய்ந்தெடுத்து குறிப்புகளைத் தந்தவர் சிங்கப்பூர் பழனியப்பன்ஆறுமுகம். ஓய்வு நாளான ஞாயிற்று கிழமைகளில் கூட ஆலயகிடங்கில் [Store Room] புகுந்து ஆவணங்களை திரட்டி, அதற்குசான்றாக நூல் நிலையம், மரபு காப்பு நிலையங்களில்உள்ள பழைய குறிப்புகள், வரைப்படங்களை தேடி எடுத்து வெளிச்சத்திற்குகொண்டு வந்தார். இச்செயலில் அவரின் உள்ளார்ந்தஆன்மீக உணர்வையும், சமுதாய அக்கறையையும் நம்மால் உணர முடிகிறது.அதோடு தான் வாழும் நாட்டைப்பற்றி சிங்கப்பூர் வரலாற்றையும் இடையிடையே சொல்லியுள்ளார்.சிங்கப்பூர் ஆலயங்களைப்பற்றி எழுத வேண்டும் என்று நான்அவரிடம் கூறியபோது சிங்கப்பூரின் ஆரம்ப கால வரலாற்று குறிப்புகள்,ஸ்டாம் போர்ட் சிங்கப்பூர் வருகை, சிவன் ஆலயம்,சீனிவாச பெருமாள் ஆலயம்,தெண்டாயுதபாணி ஆலயம், போன்ற பழைமையானஆலயங்களின் வரலாற்று குறிப்புகள்,கும்பாபிஷேகம்மலர்களையும் கொடுத்துதவினார். இத்தருணத்தின் எனது இதங்கனிந்தநன்றியறிதலை,வணக்கத்தை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் அன்பார்ந்த நண்பர் சிங்கப்பூர் பழனியப்பன் ஆறுமுகம்அவர்களுக்கு.)